சோமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல், மெக்சிகன் தொழிலதிபர் கிரேசியா முனோஸை திருமணம் செய்துள்ளார்.
சோமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் (Zomato CEO) மெக்சிகன் ஸ்டார்ட்அப் நிறுவனர் கிரேசியா முனோஸை மணந்தார். சோமேட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், தொழிலதிபர் கிரேசியா முனோஸை திருமணம் செய்தார் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
இவர்களது திருமணம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மெக்ஸிகோவில் பிறந்த கிரேசியா முனோஸ், ஒரு முன்னாள் மாடல் ஆவார். அவர் இப்போது ஆடம்பர நுகர்வோர் தயாரிப்புகளில் தனது சொந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
தீபிந்தர் கோயல் மற்றும் கிரேசியா முனோஸ் ஆகியோர் தங்கள் தேனிலவுக்கு பிப்ரவரி மாதம் சென்றதாக கூறப்படுகிறது. முனோஸ் தனது இன்ஸ்டாகிராம் பயோவில், தான் மெக்சிகோவில் பிறந்ததாகவும், இப்போது இந்தியாவில் வீட்டில் இருப்பதாகவும்" கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தீபிந்தர் கோயலுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.
அவர் முன்னதாக ஐஐடி-டெல்லியில் படிக்கும் போது சந்தித்த காஞ்சன் ஜோஷியை திருமணம் செய்து கொண்டார். 41 வயதான கோயல், குருகிராமைத் தலைமையிடமாகக் கொண்ட உணவு விநியோக தளமான சோமேட்டோவின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆவார் என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயமாகும்.