விரைவில் இந்திய செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையம் நிறுவப்படும்: அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தகவல்

By SG Balan  |  First Published Jan 25, 2024, 3:52 PM IST

ஐஇஎஸ்ஏ விஷன் உச்சி மாநாட்டில் பேசிய மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பார்வையை எடுத்துரைத்தார். இந்திய செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மத்திய அரசு விரைவில் டிஜிட்டல் இந்தியா பியூச்சர் லேப்ஸ் மற்றும் இந்திய செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையத்தை விரைவில் நிறுவ இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஐஇஎஸ்ஏ விஷன் உச்சி மாநாடு 2024 இல் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

Tap to resize

Latest Videos

நிகழ்ச்சியில் பேசிய அவர், "நாங்கள் விரைவில் இந்திய செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவோம். இது எதிர்காலத்தில் அனைத்து துறைகளுக்கும் பயப்படும் செமிகண்டக்டர் கண்டுபிடிப்புகளுக்கான மையமாக செயல்படும். மற்றொரு திட்டத்தையும் விரைவில் தொடங்க இருக்கிறோம். டிஜிட்டல் இந்தியா பியூச்சர்லாப்ஸ் (Digital India futureLABS) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் அரசு ஆய்வகங்கள், இந்திய ஸ்டார்ட்அப்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை பெருநிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டு நிறுவனமாக இருக்கும். இது டயர் 1 சப்ளையர்கள் மற்றும் ஆட்டோமோட்டிவ் தொழில்துறையையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கான தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும்" என்றார்.

யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு.. பிரதமர் மோடி கலந்து கொண்ட ராமர் கோவில் குடமுழுக்கு விழா!

"டிஜிட்டல் இந்தியா பியூச்சர்லாப்ஸ் என்ற திட்டம் இந்தியாவின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. இது நிலையான வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவித்து, உள்நாட்டு கண்டுபிடிப்புகளை வலுப்படுத்தும். பியூச்சர்லாப்ஸ் (futureLABS), C-DAC நோடல் ஏஜென்சியுடன் இணைந்து வாகனம், தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தும். இது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் எளிதாக்கும்." எனவும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொலைநோக்குப் பார்வையுடன் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எடுத்துரைத்தார். ஸ்டார்ட்அப்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் சூழல் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"கடந்த பல ஆண்டுகளாக, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதும், ஸ்டார்ட்அப்களை ஆதரிப்பதும், இணையத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றி பெறுவதும் அதிகரித்துள்ளது. ஏராளமான ஸ்டார்ட்அப்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கி இருப்பதைப் பார்க்கிறோம். இது ஒரு புதுமையான சூழலை உண்டாக்கி இருக்கிறது. இது உலகிலேயே மிகவும் உற்சாகமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் அமைப்பாக மாறியுள்ளது." என அமைச்சர் கூறினார்.

"பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வை செமிகண்டக்டர் துறையை விரிவுபடுத்துவதற்கான கட்டமைப்பையும் முதலீடுகளையும் உருவாக்கியுள்ளது. தொழில்நுட்பத் துறையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு உலகெங்கிலும் டிஜிட்டல்மயமாக்கல் காரணமாக அதிகரித்துவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆற்றலை உறுதி செய்கிறது. வாகனம், கம்ப்யூட்டர், வயர்லெஸ் தொலைத்தொடர்பு, தொழில்துறை பயன்பாடுகள் ஆகிய துறைகளிலும் இதன் தாக்கம் விரிந்துள்ளது" எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

ஜாவா முதல் ராயல் என்ஃபீல்டு வரை... இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் டாப் 5 பைக்குகள்!

click me!