டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா தான் டாப்! அமெரிக்காவை முந்திவிட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

By SG Balan  |  First Published Jan 22, 2024, 6:58 PM IST

சென்ற பத்து ஆண்டுகளில் இந்தியாவில் நிறைய மாற்றங்கள் நடந்துவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.


டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா அமெரிக்காவை விஞ்சிவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 3 ஆண்டுகளில் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் இந்தியாவில் ஒரே மாதத்தில் நடக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நைஜீரியா நாட்டிற்குச் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டின் அபுஜா நகரில் இந்திய வம்சாவளி மக்களை சந்தித்துப் பேசினார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்துவதால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்க்கையும் எளிதாகிவிட்டது என்றார்.

Tap to resize

Latest Videos

"இன்று இந்தியாவில் வெகு சிலர் மட்டுமே பணத்தைக் கையில் வைத்து செலவு செய்கிறார்கள். பெரும்பாலான பணப் பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமே நடக்கிறது. அமெரிக்காவில் 3 ஆண்டுகளில் நடக்கும் அளவுக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் இந்தியாவில் ஒரே மாதத்தில் நடக்கின்றன" என்று அமைச்சர் கூறினார்.

இனி நள்ளிரவில் 10 நிமிடங்களுக்கு மேல் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த முடியாது.. மெட்டா கொண்டு வந்த புது அம்சம்!

சென்ற பத்து ஆண்டுகளில் இந்தியாவில் நிறைய மாற்றங்கள் நடந்துவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா வேகமான வளர்ச்சியை கண்டுள்ளதாவும் குறிப்பிட்டார்.

நைஜீரியா – இந்தியா வணிக கவுன்சில் கூட்டத்திலும் வெளியுறவுத்துனை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசினார். நைஜீரிய இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் அஃபயர்ஸிலும் உரை நிகழ்த்த உள்ளார். அங்கு மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையையும் திறந்து வைக்க இருக்கிறார்.

விரைவில் கூகுள் பே மூலம் உலகம் முழுவதும் UPI பேமெண்ட் வசதி! புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

click me!