எந்தவொரு குடிமகனும் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் இணைய வசதிகளை அணுக வசதி இருக்க வேண்டும் என மசோதா முன்மொழிந்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இணைய வசதியை இலவசமாக வழங்க வலியுறுத்தும் தனிநபர் மசோதாவை பரிசீலனைக்கு எடுத்துகொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
எந்தவொரு குடிமகனும் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் இணைய வசதிகளை அணுக வசதி இருக்க வேண்டும் என மசோதா முன்மொழிந்துள்ளது. நாட்டின் பின்தங்கிய மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கும் இணைய சேவை கிடைப்பதை உறுதிசெய்யவும் வலியுறுத்திகிறது.
மாநிலங்களவையில் சிபிஐ(எம்) உறுப்பினர் வி.சிவதாசன் 2023 டிசம்பரில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாவை மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துகொள்வது பற்றி பரிசீலிக்க குடியரசுத் தலைவர் பரிந்துரை செய்திருக்கிறார். குடியரசுத் தலைவரின் பரிந்துரையை தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவை செயலாளரிடம் தெரிவித்திருக்கிறார்.
சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளில் மதுபானம் விற்க அனுமதி வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனு
கருவூலத்தில் இருந்து செலவினங்களைக் கோரும் தனிநபர் மசோதாக்களை அவையில் பரிசீலிக்க முடியுமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் மூலம் ஜனாதிபதியின் அனுமதி பெற வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச இணைய சேவையை பயன்படுத்துவதற்கான உரிமை உண்டு என்றும், அனைத்து குடிமக்களுக்கும் இணைய வசதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும மசோதா முன்மொழிகிறது.
அனைவருக்கும் இன்டர்நெட் வசதி கிடைப்பது சமூகத்தில் டிஜிட்டல் பாகுபாட்டைக் குறைக்கும் என்றும் இந்த மசோதா கருதுகிறது. அரசியலமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பெறவும் இணைய வசதி பயன்படும் என்றும் கூறுகிறது.
மத்திய அரசு தானாகவே அனைத்து குடிமக்களுக்கும் நேரடியாக இணைய சேவை வழங்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு இலவச சேவைகளை வழங்க முழுமையாக மானியம் வழங்க வேண்டும் என்று இந்த மசோதா பரிந்துரை செய்கிறது. இந்தச் சட்டத்தின் விதிகளைச் செயல்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்க வேண்டும் என்றும் முன்மொழிகிறது.
உங்களைப் பணக்காரராக மாற்றும் பொன் விதிகள்! லாபம் பல மடங்கு பெருக இதை ட்ரை பண்ணுங்க!