சந்திரயான்-3 வெற்றியை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என சனிக்கிழமை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோவின் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. இந்த வரலாற்று சாதனையைப் படைத்த முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சந்திரயான்-2 திட்டத்தில் கைநழுவிய வெற்றியை இந்த முறை சாத்தியமாக்கி இருக்கிறது.
"23 ஆகஸ்ட் 2023 அன்று சந்திரயான்-3 மிஷன் வெற்றியடைந்ததன் மூலம் இந்தியா நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற சாதனையைப் படைத்துள்ளது. மேலும் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனை வரும் ஆண்டுகளில் மனித குலத்திற்குப் பயனளிக்கும். இந்த நாள் நாட்டின் விண்வெளிப் பயண முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல். விண்வெளித் துறைக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கிறது" என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைனில் முதலீட்டில் ஏகப்பட்ட லாபமா? யோசிக்காம இந்த கும்பலிடம் மாட்டிக்காதீங்க..
"இந்த வரலாற்று தருணத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும்" என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 பயணத்தில், விக்ரம் லேண்டரும் பிரக்யான் ரோவரும் நிலவில் பல்வேறு முக்கிய ஆய்வுகள் மேற்கொண்டு முக்கியத் தகவல்களைச் சேகரித்துள்ளன. ரோவரில் உள்ள ஆல்பா பார்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (APXS) என்ற கருவி நிலவில் கந்தகம் மற்றும் பிற சிறிய தனிமங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரக்யான் ரோவரில் உள்ள லேசர் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) கருவி தென் துருவத்திற்கு அருகிலுள்ள நிலவின் மேற்பரப்பில் சல்பர் (S) இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தியது. அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti), மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) ஆகியவையும் நிலவில் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது.
விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE பேலோட் மூலம் அளவிடப்பட்ட நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாட்டின் வரைபடத்தையும் இஸ்ரோ வெளியிட்டது. லேண்டரில் உள்ள மற்றொரு கருவி ILSA நிலவில் நில அதிர்வுகள் குறித்து பதிவு செய்துள்ளது. RAMBHA-LP என்ற ஆய்வுக் கருவி நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.
கூகுள் தேடலில் புதிய AI ஆப்ஷன்! மைக்ரோசாப்ட் பிங் ஐடியாவை காப்பி அடித்த கூகுள்!