கூகுள் நிறுவனம் அபாயகரமான 22 ஆப்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் அதனை நீக்க வேண்டும் என்று கூகுள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள தவறான மற்றும் தீங்கிழைக்கும் போலியான செயலிகளை நீக்கி வருகிறது. பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள ஆப்ஸ்கள் விளம்பரங்களை இயக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது பேட்டரி ஆயுட்காலத்தை குறைகிறது என்றும், மொபைல் டேட்டாவை திருடுகிறது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
கொள்கை மீறலுக்காக இந்த ஆப்களை Google Play Store இலிருந்து அகற்றியுள்ளது. இருப்பினும், அவற்றைப் பதிவிறக்கிய Android பயனர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து அவற்றை கைமுறையாக நீக்க வேண்டும்பயனர்கள் தங்கள் ஃபோன்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டிய Android பட்டியலை காண்போம்.
undefined
1.பரோ டி.வி
இது ஒரு நேரடி டிவி ஆப் ஆகும்.
2. DMB ஆப்
இது டிஜிட்டல் டிஸ்ட்ரிபியூட்டர் ஆப் ஆகும். இது டிஜிட்டல் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படலாம்.
3. ஜிஹஸாப்ட்
ஆண்ட்ராய்டு போன்களுக்கான இலவச மற்றும் பாதுகாப்பான மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இந்த Jihosoft ஆப் பயனர்களை அனுமதிக்கிறது.
4. மியூசிக் படா
இது இலவச மியூசிக் டவுன்லோடர் ஆப் ஆகும்.
5. மியூசிக் டவுன்லோடர்
இது ஒரு இலவச இசை பதிவிறக்க ஆப் ஆகும்.
6. பரோ
இது ஒரு டிஜிட்டல் கிஃப்டிங் ஆப் ஆகும்.
7. பரோ டி.வி
இது ஒரு கொரிய நேரடி டிவி ஆப்.
8. நியூ லைவ்
இது ஒரு ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் கேம் ஆப் ஆகும்.
9. பரோ
இது காற்றழுத்தமானி மற்றும் டிஜிட்டல் அல்டிமீட்டர் ஆப் ஆகும்.இது வானிலை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுகிறது.
10. ரிங்டோன்கள் ப்ரீ மியூசிக்
இந்த ஆப் பயனர்களை இலவச இசை ரிங்டோன்களைப் பதிவிறக்க அனுமதிக்கிறது
11. ஆல் பிளேயர்
ஆல் பிளேயர் (ALLPlayer) என்ற இந்த ஆப், ஒரு மல்டிமீடியா உள்ளடக்க பிளேயராக செயல்படுகிறது.
12. Com’ONAIR
இது வீடியோ ஸ்விட்ச்சிங் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யும் ஆப் ஆகும்.
13. Watch realtime TV DMB
இது ஒரு நேரடி டி.வி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் செயலி ஆகும்.
14. ஸ்ட்ரீம்கார் லைவ் ஸ்ட்ரீமிங்
இது ஒரு சோசியல் ஸ்ட்ரீமிங் ஆப். இது பயனர்களை நண்பர்களுடன் ஹேங்கவுட் செய்ய அல்லது புதிய நபர்களுடன் இணைக்க உதவுகிறது
15. லைவ் பிளே
இதில் பயனர்கள் வீடியோக்களைப் பார்க்க அனுமதிக்கிறது.
16. OnAir Airline Manager
இது பயனர்கள் தங்கள் விமான பயணத்தை நிர்வகிக்கும் ஆப் ஆகும்./
17. எம்மியூசிக்
இது ஒரு மங்கோலிய இசை செயலி ஆகும். இது பயனர்களை பதிவிறக்கம் செய்து பாடல்களைக் கேட்க அனுமதிக்கிறது.
18. PUBG மொபைல் (KR)
இது பிரபலமான கேம் PUBG இன் கொரிய பதிப்பு ஆகும்.
19. மியூசிக் பிளேயர் - ஆடியோ பிளேயர்
மியூசிக் பிளேயர் என்ற இந்த செயலி, மியூசிக் கோப்புகள் மற்றும் வீடியோக்களை எளிதாகத் தேட அனுமதிக்கிறது.
20. AT பிளேயர்
இது ஒரு மியூசிக் பிளேயர் பயன்பாடாகும். இது பிரத்யேக ரேடியோ ஆதரவுடன் வருகிறது.
21. டிராட் மியூசிக் பாக்ஸ்-இலவச டிராட் மியூசிக் பிளேயர்
இது ஒரு மியூசிக் பிளேயர். இதில் நீங்கள் விரும்பும் இசையைக் கேட்கலாம்.
22. Compose music with instruments
இந்த ஆப் பயனர்களை மெய்நிகர் பியானோவைப் பயன்படுத்தி இசையமைக்க அனுமதிக்கிறது. உங்களது மொபைலில் மேற்கண்ட ஆப்ஸ்கள் இருந்தால், அதனை உடனே அன்இன்ஸ்டால் செய்யவும்.
Draining Apps : பேட்டரியைக் குறைக்கும் 43 ஆப்ஸ்கள் இதுதான்.. உடனே மொபைலில் இருந்து நீக்குங்க.!!