Google Pixel 8A : கூகுள் நிறுவனம் தனது புதிய கூகுள் பிக்சல் 8aவை தனது கூகுள் I/O 2024 நிகழ்வில் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த சில வாரங்களாக இந்த ஸ்மார்ட்போனின் பல விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
அதன்படி Pixel 8aன் விலையும் இப்பொது ஆன்லைனில் கசிந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு கூகுளின் மிகவும் மலிவு விலையில் விற்பனையான Pixel 8-சீரிஸ் ஸ்மார்ட்போனை வாங்க, வழக்கத்தைவிட வாடிக்கையாளர்கள் சற்று அதிக தொகையை செலுத்த நேரிடும் என்று நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு வெளியான Pixel 7a போல இந்த புதிய போன் சில AI தொடர்பான அம்சங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் Pixel 8a-ன் விலை சில்லறை விற்பனையாளரால் பட்டியலிடப்பட்ட வகையில் அதன் 128GB வகைக்கு CAD 708.99 (தோராயமாக ரூ. 42,830) இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 256GB மாறுபாட்டின் விலை CAD 7092.90 (ரூ.4792.90) இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல Pixel 8a இந்தியாவிலும் இந்த இரண்டு வகையில் தான் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
ரூ.15 ஆயிரம் தான்.. 8ஜிபி ரேம்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. பட்டையை கிளப்பும் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?
இதற்கிடையில், Pixel 8a விலை இந்தியாவில் அதற்கு முன் வெளியான பிக்சல் 7a-ஐ விட 1000 முதல் 2,000 ரூபாய் அதிகமாகத்தான் இருக்கும் என்று இணைய அறிக்கை கூறுகிறது. கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் Google Pixel 7a ஐ அறிமுகப்படுத்தியதை யாரும் மறந்துவிட முடியாது. அப்போது அதன் விலை 8ஜிபி RAM + 128ஜிபி ROM வகை 43,999ஆக இருந்தது.
கூகிள் Pixel 8a ஐ அதன் டென்சர் G3 சிப் மூலம் ஆற்றல் பெறலாம். இது பிக்சல் 8 தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு சக்தி அளிக்கிறது, இது ஸ்மார்ட்போனில் AI மாடல்களுக்கான ஆதரவை செயல்படுத்துகிறது. இருப்பினும், Pixel 8a ஆனது 120Hz Refresh வீதத்துடன் 6.1-இன்ச் OLED திரையுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான மாடலைப் போலவே இந்த போன் 5G மற்றும் 4G LTE இணைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mobile Theft : செல்போன் தொலைஞ்சு போனா உடனே நீங்க செய்ய வேண்டிய 3 விஷயங்கள் இதுதான்..