பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கொடுத்த கூகுள்! காரணம் இதுதானாம்!

By SG Balan  |  First Published Jun 26, 2023, 4:45 PM IST

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


கூகுள் நிறுவனமத்தில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரிந்த ஊழியர்கள்  பணிச்சூழல் பற்றிப் புகார் கூறியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டனர். கூகுள் நிறுவனம் இப்போது அவர்களுக்கு திரும்ப வேலை அளித்துள்ளது. அந்த ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த மே 31ஆம் தேதி கூகுள் நிறுவனத்தின் சர்ஜ் எஞ்சின் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் பணிபுரியும் ஆறு ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் தாங்கள் பணிபுரியும் பணிச்சூழல் குறித்து புகார் செய்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஆல்பாபெட் தொழிலாளர்கள் யூனியன் ட்விட்டரில் கூறியிருந்தது.

Latest Videos

undefined

இது புளிக்குழம்பா எலிக்குழம்பா! உ.பி. மருத்துவக் கல்லூரி உணவில் செத்துக் கிடந்த எலி!

இந்த மாத தொடக்கத்தில் வெளியான தி வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையில், கூகுள் நிறுவனத்தின் பார்ட் (Bard) சாட்போட் பணியாளர்கள் குறைந்த ஊதியம் மற்றும் நியாயமற்ற காலக்கெடு நிர்ணயம் போன்றவை தொடர்பாக பேசியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினைகளால் தாங்கள் வேலையைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

திடீரென போராட்டத்தைக் கைவிட்ட மல்யுத்த வீராங்கனைகள்! நீதிமன்ற போராட்டம் தொடரும் என அறிவிப்பு!

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை வழங்கும் அப்பென் (Appen) என்ற நிறுவனத்தால் புகார் கூறிய பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தேசிய தொழிலாளர் உறவு வாரியத்தில் புகார் அளித்தனர்.

ஊதிய உயரவு மற்றும் பணிச்சூழலை மேம்படுத்த வேண்டும் என்று கிட்டத்தட்ட ஒரு வருடமாக வலியுறுத்தி வந்ததாகவும் தொழிலாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஆல்பாபெட் தொழிலாளர்கள் யூனியன் இப்போது அந்தத் தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவித்துள்ளது.

பார்ட் (Bard) செயற்கை நுண்ணறிவு சாட்போட் (Chatbot) தொடர்பான பணியில் இருக்கும் ஊழியர்கள், சாட்போட்டில் அளிக்கும் பதில்கள் தவறானவையாகவும், ஆபத்தானவையாகவும் உள்ளதாகக் கூறி இருந்தனர். மேலும், பார்ட் சாட்போட் தரும் பதில்களை நம்ப முடியாது என்றும்  அவை பயங்கரமானவை என்றும் தெரிவித்திருந்தனர்.

இனிமேல் இந்த கவலை கிடையாது.. அசத்தலான லேட்டஸ்ட் வாட்ஸ்அப் அப்டேட்.!!

click me!