ஆல்ஃபபெட் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 2022ஆம் ஆண்டுக்கான சம்பளம் சராசரி சம்பள அளவைவிட 800 மடங்கு அதிகம் ஆகும்.
ஆல்ஃபபெட் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 2022ஆம் ஆண்டுக்கான சம்பளமாக 226 மில்லியன் டாலர் தொகையை வழங்கியுள்ளது. இது அந்த நிறுவனத்தின் ஊழியர்களின் சராசரி சம்பள அளவைவிட 800 மடங்கு அதிகம் ஆகும். சுந்தர் பிச்சைக்கு வழங்கிய இந்தத் தொகையில் தொகையில் 218 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனத்தின் பங்குகளும் அடங்கும்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் உலகளவில் வேலை ஆட்களைக் குறைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஊதிய ஏற்றத்தாழ்வு கவனத்துக்கு உரியதாக மாறியுள்ளது. கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 6 சதவீதம் பேரை, அதாவது கிட்டத்தட்ட 12,000 பணியாளர்களை கடந்த ஜனவரி மாதம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், மீண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடர்பாக தகவல் வெளியானதும் அதிர்ச்சி அடைந்த நூற்றுக்கணக்கான கூகுள் லண்டன் அலுவலக ஊழியர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் நிறுவனத்திலிருந்து தாமாகவே வெளியேறியுள்ளனர்.
இதேபோல மார்ச் மாதத்திலும் பல ஊழியர்கள் ஒரே நேரத்தில் விலகியது சர்ச்சைக்குள்ளானது. சூரிச் கூகுள் அலுவலகத்தில் பணிநீக்கம் செய்யப்படுவது தொடர்பான தகவலின் எதிரொலியாகவே 200 பேருக்கு மேல் வெளியேறினர்.
Breaking: மூணாறில் வேன் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்