Google நிறுவனம் தற்போது புதிதாக செயற்கை நுண்ணறிவு உட்பொதிக்கப்பட்ட AI Chatbot Serivce அறிமுகம் செய்கிறது. இது மக்கள் மத்தியில் தொழில்நுட்பத்தை அடுத்த பரிணாமத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைகிறது.
மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளானது, தேடல் அம்சத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கருவிகளையும், தளங்களையும் அறிமுகம் புதுப்பித்து வருகிறது. அந்த வகையில், தேடுபொறிக்கு அடுத்த நிலையாக, Bard என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு மிக்க தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த பார்ட் தளம் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் தற்போது சோதனை முயற்சியாக கிடைக்கிறது. விரைவில் இயல்பான பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘AI என்பது இன்று நாம் வேலை செய்யும் அன்றாட பணிகளை எளிமையாக்கும் மிக ஆழமான தொழில்நுட்பமாகும். மருத்துவர்களுக்கு முன்னதாகவே நோய்களைக் கண்டறிவதற்கும், மக்கள் தங்கள் சொந்த மொழியில் தகவல்களை பெறுவதற்கும், இன்னும் பலவற்றிக்குமான தகவலை பெறுவதற்கும் AI உதவுகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக AI தளத்தில் முதலீடு செய்து வருகிறோம், மேலும் Google AI மற்றும் DeepMind ஆகியவை நவீன நிலையை மேம்படுத்துகின்றன. இன்று, மிகப்பெரிய AI பயன்பாடு அளவானது ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இரட்டிப்பாகிறது,
Bard Announced: பார்டு அறிமுகம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, LaMDA (Language Model for Dialogue Applications) லேம்டா எனப்படும் அடுத்த தலைமுறை மொழி மற்றும் உரையாடல் திறன்களை வெளிப்படுத்தும் தளத்தை நாங்கள் வெளியிட்டோம். LaMDA மூலம் இயங்கும் AI உரையாடல் சேவையை தற்போது மேம்படுத்தி வருகிறோம், இதை நாங்கள் பார்டு (Bard) என்று அழைக்கிறோம். இன்னும் ஒருசில வாரங்களில் இந்த பார்டு தளம் பொதுமக்களுக்கு மிகவும் பரவலாகக் கிடைத்திட வழிவகை செய்யப்படும். அதற்கு முன்னதாக, சோதனை முறையில் குறிப்பிட்ட பயனர்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் எங்கள் சோதனையில் மற்றொரு படி முன்னேறுகிறோம்.
பார்டு தளமானது நமது மொழி மாதிரிகளின் சக்தி, நுண்ணறிவு மற்றும் படைப்பாற்றலுடன் உலக அறிவையும் இணைத்து வழங்குகிறது. இது இணையதளங்களில் இருந்து தகவல்களை பெற்று, புதுமையான முறையில், நியாயமான, தெளிவான, தரமான பதில்களை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த தளம் மூலம், நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் துணையுடன் புதிய கண்டுபிடிப்புகளை 9 வயது குழந்தைக்கு கூட விளக்கி சொல்ல முடியும்.
லேம்டாவின் இலகுரக மாடல் பதிப்பின் துணைகொண்டு, பார்டை தற்போது வெளியிடுகிறோம்.
Google AI chatbot : ChatGPT-க்குப் போட்டியாக களம் இறங்கிய Google.. வருகிறது Bard
இதை பயன்படுத்துவதற்கு ஒரளவு திறன் கொண்ட கணினியை கூட பயன்படுத்தலாம். மேலும், பயனர்களின் கருத்துகளையும் எங்களால் எளிதாக பெற்றுக்கொள்ள முடியும். இந்த கருத்துக்கள் பார்டு தளத்தை மேம்படுத்துவதற்கும், பயனர்களுக்கு இன்னும் சிறப்பான தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதை உறுதிசெய்யவும் பயன்படுத்தப்படும். பார்டு தளத்தின் தரம் மற்றும் வேகத்தை தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த பயன்படும் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.