விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46... கொண்டாட்டத்தில் குதுகலித்த விஞ்ஞானிகள்!!

By sathish kFirst Published May 22, 2019, 11:04 AM IST
Highlights

ரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளுடன், பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுவிட்டது.

புவி கண்காணிப்பை அதிகப்படுத்தும் வகையில், 'ரிசாட் 2பி ஆர்1' என்ற புதிய செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியது.

இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று(மே.22) காலை, 5.27 மணிக்கு ஏவப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான கவுன்ட்டவுன் நேற்று துவங்கியது.
இந்நிலையில், இன்று திட்டமிட்டபடி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ரிசாட் 2பி ஆர்1' செயற்கைக் கோளின் எடை 615 கிலோ; இதன் ஆயுட் காலம் 5 ஆண்டகள். 

இதில் உள்ள ரேடார் கருவிகள் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டவை.  இரவு, பகல் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் பூமியைத் தெளிவாக படம் பிடித்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப முடியும். பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கு இந்த செயற்கைக்கோள் பயன்படும். சரியான பாதையில் பயணித்த ராக்கெட், ரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளை புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.இதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ராக்கெட் ஏவப்படுவதைப் பார்க்க, ஏவுதளத்தில் முதன்முறையாக பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இஸ்ரோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள்ஐயாயிரம் பேர் அமரும் இடமான கேலரியில் தகுந்த பாதுகாப்புடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்ததை கண்டுகளித்தனர் .

click me!