சாம்சங் சாதனை : மடிக்கும் ஸ்மார்ட் போன் அறிமுகம் – மக்களிடையே பெருத்த வரவேற்பு ..!
ஸ்மார்ட் போன் சந்தையை பொறுத்தவரை , மிகவும் புகழ் பெற்ற நிறுவனமான சாம்சங் நிறுவனம் , இந்த ஆண்டு பல புதிய போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது .
சாம்சங் நிறுவனத்திற்கு சந்தையில் எப்பொழுதும் நல்ல வரவேற்பு உண்டு. ஒவ்வொரு புது வரவும், மக்களிடையே நல்ல வாவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது, கேலக்சி S8 என்ற ஸ்மார்ட் போனின் வருகைக்காக வாடிக்கையாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், ‘சாம்சங் X' என பெயரிடப்பட்டுள்ள புதிய வகையான மடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மடிக்கும் ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள்:
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை டேப்லெட், மினி கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்திகொள்ள முடியும்
மேலும், பல்வேறு ஸ்கிரீன்கள் ஒன்றிணைந்து 7 இஞ்ச் ஸ்கிரீனாக பார்க்க முடியும்.
ஒயர்லெஸ் மவுஸ் பயன்படுத்தி, லேப்டாப் போன்று பயன்படுத்தி கொள்ளலாம்
குறிப்பு :
1௦ லட்சம் மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தற்போது இந்த மடிக்கும் வகையான ஸ்மார்ட் போன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.