அடிச்சு தூக்கிய மோட்டோ! 5000mAh பேட்டரி, 50MP கேமரா - பட்ஜெட்டில் இப்படியொரு 5G போனா?

Published : Aug 10, 2025, 07:00 AM IST
Moto G35 5G

சுருக்கம்

பிளிப்கார்ட்டில் மோட்டோ G35 5G போன் ரூ.9,499-க்கு கிடைக்கிறது! 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 18W சார்ஜிங் அம்சங்கள்!

பிளிப்கார்ட்டில் மோட்டோ ஜி35 5ஜி-க்கு சூப்பர் தள்ளுபடி!

பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோ ஜி35 5ஜி (Moto g35 5G) ஸ்மார்ட்போனுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் ரூ.9,499 பட்ஜெட்டில், 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு டிஸ்பிளே போன்ற அசத்தலான அம்சங்களை இந்த போன் வழங்குகிறது. யுனிசோக் டி760 சிப்செட் உடன் வரும் இந்த மோட்டோ ஜி35 5ஜி போனின் விலை, தள்ளுபடி மற்றும் சிறப்பு அம்சங்களைப் பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்.

விலை மற்றும் வங்கி சலுகைகள்!

இந்தியச் சந்தையில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி35 5ஜி மாடலின் அசல் விலை ரூ.9,999 ஆகும். ஆனால், ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், ரூ.500 வங்கித் தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம், இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.9,499 பட்ஜெட்டில் வாங்கிச் செல்லலாம். இது தவிர, பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்யும் சலுகையும் உள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக ரூ.8,350 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பை பெற முடியும்.

டிசைன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்!

இந்த பட்ஜெட் விலையில், வீகன் லெதர் பேனல் (Vegan Leather Panel) கொண்ட பிரீமியம் டிசைன் இந்த போனில் உள்ளது. மேலும், IP52 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெப்பெல்லன்ட் அம்சமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது, இது நீர் தெறிப்புகளிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்கிறது. லீப் கிரீன் (Leaf Green), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் குவாவா ரெட் (Guava Red) ஆகிய கவர்ச்சிகரமான வண்ணங்களில் இந்த போனை ஆர்டர் செய்யலாம். இந்த பட்ஜெட்டில் பொதுவாக எதிர்பார்க்க முடியாத கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு டிஸ்பிளேவும் இதில் உள்ளது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் குவாட் பிக்சல் டெக்னாலஜி மூலம், மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகரான தரமான புகைப்படங்களை எடுக்கலாம். ஒட்டுமொத்தமாக, டிசைன் மற்றும் கேமரா அவுட்புட்டில் இந்த போன் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.

மோட்டோ ஜி35 5ஜி அம்சங்கள் (Moto g35 5G Specifications)!

இந்த மோட்டோ போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் வருகிறது. மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்டேட் மற்றும் 2 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் மோட்டோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மீடியாடெக் அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட் இல்லாமல், ஆக்டா கோர் யுனிசோக் டி760 6என்எம் (Octa Core UNISOC T760 6nm) சிப்செட் இதில் உள்ளது. இந்த சிப்செட்டிற்கு இணையாக மாலி ஜி58 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருப்பதால், மிதமான செயல்திறனை எதிர்பார்க்கலாம்.

128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த போனில், 1 டிபி வரை மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்த முடியும். இதற்காக டூயல் சிம் ஸ்லாட் மட்டுமல்லாமல், பிரத்யேக எஸ்டி கார்டு ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. குவாட் பிக்சல் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா பின்பக்கத்தில் உள்ளது. செல்ஃபி எடுக்க 16 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பட்ஜெட் மாடல்களில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த மோட்டோ ஜி35 5ஜி போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி உள்ளது. மேலும், பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர்களுக்குப் பதிலாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பமும் இதில் இடம்பெற்றுள்ளது, இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?