
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு Flipkart நிறுவனம் Freedom Sale 2025-ஐ ஆகஸ்ட் 13, புதன்கிழமை முதல் துவக்கியுள்ளது. இந்த சலுகை ஆகஸ்ட் 17 வரை நடைபெறுகிறது. இந்தக் காலத்தில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், டேப்லெட்கள், லேப்டாப்கள், டிவிகள், ஹோம் அப்பிள்ளைகள் போன்ற பல மின்னணுப் பொருட்கள் விலை குறைப்பு, கேஷ்பேக், மற்றும் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பல பிராண்டுகளின் சலுகைகள்
Samsung, Oppo, Apple, Motorola, Nothing போன்ற முன்னணி பிராண்டுகளின் மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், வாடிக்கையாளர்கள் 0% வட்டியில் எளிய EMI வசதியுடன் வாங்கவும், பழைய மொபைலை மாற்றி கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம்.
சிறப்பு தள்ளுபடிகள்
இந்த சலுகையின் போது, புதிய Oppo K13 Turbo மற்றும் K13 Turbo Pro மாடல்களை முன்பதிவு செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.3,000 வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இந்த இரண்டு மாடல்களிலும் LED ரிங் கொண்ட in-built கூலிங் பான் எனும் தனிச்சிறப்பு உள்ளது. கூடுதலாக, Flipkart Axis கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1,400 கேஷ்பேக், Flipkart Axis டெபிட் கார்டு பயனர்களுக்கு ரூ.750 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
சலுகை விலை
இந்த சலுகையில் Oppo K13 Turbo ரூ.33,999 முதல் ரூ.24,999-க்கு குறைக்கப்பட்டுள்ளது. Oppo K13 Turbo Pro ரூ.41,999-இல் இருந்து ரூ.34,999-க்கு, Oppo F27 Pro+ 5G ரூ.32,999-இல் இருந்து ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Oppo K13 5G ரூ.22,999-இல் இருந்து ரூ.15,999-க்கு, Oppo Reno 14 5G ரூ.42,999-இல் இருந்து ரூ.34,200-க்கு குறைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17 வரை
Oppo K13x 5G ரூ.16,999-இல் இருந்து ரூ.10,999-க்கு, Oppo Reno 14 Pro 5G ரூ.54,999-இல் இருந்து ரூ.45,000-க்கு, Oppo F29 5G ரூ.30,992-க்கு ரூ.30,992-க்கு கிடைக்கிறது. Oppo A5 5G ரூ.19,499-இல் இருந்து ரூ.14,724-க்கு, Oppo A3x 5G ரூ.14,999-இல் இருந்து ரூ.10,449-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகைகள் ஆகஸ்ட் 17 வரை மட்டுமே கிடைக்கும். எனவே, புதிய மொபைல் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இந்த சலுகையை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.