
டெல்லி: விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான விவோ வி60 இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 8 ஜிபி+128 ஜிபி, 8 ஜிபி+256 ஜிபி, 12 ஜிபி+256 ஜிபி, 16 ஜிபி+512 ஜிபி என நான்கு விதமான வேரியண்ட்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. முறையே ₹36,999, ₹38,999, ₹40,999 மற்றும் ₹45,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பிஷியஸ் கோல்ட், மூன்லைட் ப்ளூ, மிஸ்ட் கிரே ஆகிய நிறங்களில் இது கிடைக்கும்.
6.77 இன்ச் ஃபுல் எச்டி+ குவாட் கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டயமண்ட் ஷீல்ட் கிளாஸ் பாதுகாப்பு ஆகியவற்றை விவோ வி60 கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸர், 16 ஜிபி வரை ரேம், 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆகியவையும் இதில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 15 இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில், சர்க்கிள் டு சர்ச், லைவ் கால் மொழிபெயர்ப்பு, டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட், இரேஸ் 2.0 போன்ற பல AI அம்சங்கள் உள்ளன. 8 ஜிபி, 12 ஜிபி, 16 ஜிபி ரேம் விருப்பங்களில் இது கிடைக்கிறது.
இரட்டை சிம் வசதியுடன், 50MP + 8MP + 50MP மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் 50MP முன்புற கேமராவைக் கொண்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், USB டைப்-C போர்ட், 90W வேக சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி, IP68 + IP69 தரச்சான்று ஆகியவையும் இதில் உள்ளன.
நான்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்களை விவோ வி60 பெறும். ஆகஸ்ட் 19 முதல் Amazon.in, Flipkart மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விவோ வி60 விற்பனைக்கு வரும்.