ப்ளிப்கார்டில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.. அதிக சலுகை பெறும் டாப் 5 மாடல்கள்..!

By Kevin Kaarki  |  First Published May 28, 2022, 5:39 PM IST

ப்ளிப்கார்ட் எஸலெக்டிரானிக்ஸ் சேல் 2022 விற்பனையில் மிட் ரேன்ஜ்  ஸ்மார்ட்போன் மாடல்களை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும்.


ப்ளிப்கார்ட் வலைதளத்தில் 2022 எலெக்டிரானிக்ஸ் சேல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பொருட்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ஸ்மார்ட்போன் மாடல்களை அதிக சலுகைகள் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிக் கொள்ள முடியும். அந்த வகையில் புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிடுவோர் இந்த சிறப்பு விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம். 

ப்ளிப்கார்ட் எஸலெக்டிரானிக்ஸ் சேல் 2022 விற்பனையில் மிட் ரேன்ஜ்  ஸ்மார்ட்போன் மாடல்களை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும். ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் அதிக சலுகைகளுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்களில்  டாப் 5 பட்டியலை பார்ப்போம். 

Tap to resize

Latest Videos

சியோமி 11i 5ஜி

ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் சியோமி 11i 5ஜி மாடலுக்கு 16 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 இல் இருந்து ரூ. 24 ஆயிரத்து 999 என குறைந்து இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி A33:

சாம்சங் கேலக்ஸி A33 ஸ்மார்ட்போனிற்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என துவங்குகிறது. 

மோட்டோரோலா எட்ஜ் 20 5ஜி:

மோட்டோரோலா எட்ஜ் 20 5ஜி ஸ்மார்ட்போனிற்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது. 

ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி

ப்ளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ T1 ப்ரோ 5ஜி:

விவோ நிறுவனத்தின் புதிய T1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனிற்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 30 ஆயிரத்து 990-இல் இருந்து ரூ. 24 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.

click me!