Facebook & Instagram Down : Facebook மற்றும் இன்ஸ்டாகிராம் சர்வர்கள் முடங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அளவில் சர்வர்கள் முடங்கியுள்ள நிலையில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை பயன்படுத்த முடியவில்லை என்று பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த விவகாரத்தில் META எந்தவிதமான பதிலையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மட்டுமல்லாமல், உலக அளவில் பல இடங்களில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடங்கியுள்ளது. பயனர்கள் தங்களது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்குள் உள்நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஏன் இந்த பிரச்சனை ஏற்பட்டது? என்பது குறித்த META நிறுவனம் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
இந்த பிரச்சனை எப்போது தீரும் என்ற தகவலும் இதுவரை வெளியாகாததால் பயனர்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். பலருக்கு அவர்களது முகநூல் கணக்குகள் லாக் அவுட் ஆகியுள்ளதாகவும், மீண்டும் உள்நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
இதுபோன்ற விஷயங்கள் குறித்து கணக்கிடும் டவுன்டெக்டர் என்ற இணையதளம், உலகளவில் 3,00,000 பேஸ்புக் செயலிழப்புகளையும் 47,000க்கும் மேற்பட்ட செயலிழப்பு குறித்த அறிக்கைகளையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு 8:56 மணிய முதல் சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக பயனர்கள் தங்கள் முகநூல் மாற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் உள்நுழையமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
We're aware people are having trouble accessing our services. We are working on this now.
— Andy Stone (@andymstone)தற்போது META நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் வெளியிட்ட X பக்க பதிவில், "எங்கள் சேவைகளை அணுகுவதில் மக்கள் சிக்கலை எதிர்கொள்வதை நாங்கள் அறிவோம். நாங்கள் இப்போது அதுகுறித்த வேலையில் ஈடுபட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
எலக்ட்ரானிக் கழிவுகளைத் தங்கமாக மாற்றலாம்! புதிய வழியைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!