Curved Displayயுடன் ஒரு மிட் ரேஞ்ச் ஸ்மார்ட் போன்.. அறிமுகமாகிறது LAVA Blaze Curve 5G - விலை & ஸ்பெக் இதோ!

Ansgar R |  
Published : Mar 05, 2024, 03:54 PM IST
Curved Displayயுடன் ஒரு மிட் ரேஞ்ச் ஸ்மார்ட் போன்.. அறிமுகமாகிறது LAVA Blaze Curve 5G - விலை & ஸ்பெக் இதோ!

சுருக்கம்

LAVA Blaze Curve 5G : இன்று மார்ச் 5ம் தேதி தனது புதிய Curved Display கொண்ட மிட் ரேஞ்ச் ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது பிரபல லாவா நிறுவனம். 

Lava Blaze Curve 5G இந்தியாவில் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) அறிமுகப்படுத்தப்பட்டது, இது உள்நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா இன்டர்நேஷனல் வழங்கும் சமீபத்திய 5G போனாக உள்ளது. இந்த புதிய கைபேசி இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. மற்றும் ஆக்டா-கோர் MediaTek Dimensity 7050 SoCல் இயங்குகிறது. 

Lava Blaze Curve 5G ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67-இன்ச் 3D Curved Displayஐ கொண்டுள்ளது. மற்றும் 64-மெகாபிக்சல் முதன்மை சென்சார் தலைமையிலான மூன்று பின்புற கேமரா அலகுகளைக் கொண்டுள்ளது. Dolby Atmos மூலம் இயங்கும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 33W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி ஆகியவை புதிய சாதனத்தின் மற்ற முக்கிய அம்சங்களாகும்.

ரூ.20,000 தள்ளுபடி அறிவித்த ஆப்பிள் நிறுவனம்.. இந்தியாவில் மேக்புக் ஏர் எம்2 விலை குறைப்பு.. உடனே வாங்குங்க!

இந்தியாவில் Lava Blaze Curve 5Gன் விலை 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ROM மாடலுக்கு 17,999 ரூபாயும். 256ஜிபி ROM கூடிய உயர் மாறுபாட்டின் விலை ரூ. 18,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அயர்ன் கிளாஸ் மற்றும் விரிடியன் வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது மற்றும் அமேசான், லாவா இ-ஸ்டோர் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் மார்ச் 11 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் சிம் (நானோ) கொண்ட Lava Blaze Curve 5G ஆனது ஆண்ட்ராய்டு 13ல் இயங்குகிறது மேலும் இது ஆண்ட்ராய்டு 14க்கு மேம்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு காலாண்டு பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 5G ஃபோனில் 6.67-இன்ச் முழு-HD+ (1,080x2,400 பிக்சல்கள்) 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 394ppi பிக்சல் அடர்த்தி கொண்டது இந்த ஸ்மார்ட் போன்.

தாறுமாறான அம்சங்களுடன் களமிறங்கும் ஆசஸ்.. அதிர வைக்கும் Specs-களுடன் வரும் ROG Zephyrus G16..!

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

அமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!
Washing Machine: வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து நிச்சயம் - உஷார்!