நீயா, நானா போட்டியில் எலான் மஸ்க், ஜுக்கர்பெர்க்; பேஸ்புக், இன்ஸ்டாவுக்கு செக் வைக்க ட்விட்டரில் புதிய வசதி!!

By SG Balan  |  First Published Aug 5, 2023, 1:07 PM IST

இதுவரை ட்விட்டரில் லைவ் வீடியோ பதிவிடும் வசதி இல்லாத நிலையில், இப்போது அனைவரும் லைவ் வீடியோ வெளியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 


எலான் மஸ்க் ட்விட்டர் இணைதளத்தை சொந்தமாக்கியதில் இருந்து புதிதாக பல மாற்றங்களை அடைந்து வருகிறது. குறிப்பாக, ட்விட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றியதில் இருந்து மற்ற சமூக வலைத்தளங்களில் உள்ள எல்லா வசதிகளையும் சேர்க்க எலான் மஸ்க் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்தத் திட்டத்தின்படி ட்விட்டரில் தற்போது வீடியோவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எழுத்து மற்றும் படங்கள் மட்டுமே அதிகமாகப் பதிவிடப்பட்டுவந்த நிலையில், இப்போது வீடியோக்களும் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, லைவ் வீடியோ வசதியும் ட்விட்டருக்கு வந்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதுவரை ட்விட்டரில் லைவ் வீடியோ பதிவிடும் வசதி இல்லாத நிலையில், இப்போது அனைவரும் லைவ் வீடியோ வெளியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் புதிய சேவையை மூலம் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்குப் போட்டியாக மாறியுள்ளது.

இன்டர்நெட் இல்லாமலே மொபைலில் டிவி பார்க்க முடியுமா? புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுவரும் மத்திய அரசு

https://t.co/4YeQWPz1Xw

— Elon Musk (@elonmusk)

இப்போது இந்த லைவ் வீடியோ அம்சம் ஐபோன்களில் மட்டுமே மட்டுமே இருக்கிறது. மிகவும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையிலும் உள்ளது. இதனை அறிமுகப்படுத்தும் வகையில் எலான் மஸ்க் தனது பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வசதி அறிமுகமான உடனேயே அமெரிக்காவில் இதனை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்த லைவ் வீடியோவில் வீடியோவைப் பற்றிய குறிப்பு (Description) இருப்பது அவசியம். இதன் மூலம் லைவ் வீடியோக்களையும் தேடிப் பார்க்க முடியும். குறிப்பாக, ட்விட்டர் ட்ரெண்டுகளிலும் இந்த லைவ் வீடியோக்கள் இடம்பெறும் என்பதால் சமூக வலைத்தள பிரபலங்கள் இவற்றை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

நிலவின் சுற்றுப்பாதைக்குச் செல்லும் சந்திரயான்-3! இன்று இரவு 7 மணிக்கு முக்கிய நகர்வு!

click me!