ஸ்பேஸ் எக்ஸ் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தடம் பதிக்கும்: எலான் மஸ்க் உறுதி

By SG Balan  |  First Published Jan 13, 2024, 4:44 PM IST

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அடுத்த 8 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்தில் ஸ்டார்ஷிப் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கும் என்று எலான் மஸ்க் உறுதிபடக் கூறியுள்ளார்.


செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்கான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன விண்கலத்தின் மூன்றாவது சோதனை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள், விண்வெளி சுற்றுலா என பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நிலவுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்ப முயல்கிறது.

Latest Videos

undefined

33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டையும் ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்துள்ளது. ஆனால், ஏற்கெனவே இரண்டு முறை நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறியது.

இயர்போன், இயர்பட்ஸ் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு.. இதை கவனிச்சு பார்த்திருக்கீங்களா?

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதற்கட்ட சோதனை நடந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு சோதனை தோல்வியில் முடிந்தது. பிரச்சினை சரிசெய்யப்பட்டு இரண்டாவது முறையாக நவம்பர் மாதம் மீண்டும் சோதனை நடைபெற்றது. அப்போது விண்கலம் தனியாக பிரிந்தபிறகு, பூஸ்டர் வெடித்துவிட்டது.

கடந்த காலத்தில் நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மூன்றாவது முறையாக அடுத்த மாதம் மற்றொரு சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவப்படுவதற்கு அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகத்தின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது.

"மூன்றாவது ஸ்டார்ஷிப் சோதனை வெற்றிகரமாக அமையும்" என்று கூறியுள்ள எலான் மஸ்க், தனது நிறுவனம் அடுத்த 8 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்தில் ஸ்டார்ஷிப் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கும் என்று உறுதிபடக் கூறியுள்ளார். நிலவுக்கும் மனிதர்களை அனுப்பும் என்றும் தெரிவித்தார்.

மேலும், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தங்குவதற்கு ஏற்ற நிலையை உருவாக்க நிறைய வேலைகள் செய்யவேண்டி இருக்கும் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மதிப்புமிக்க நிறுவனம் மைக்ரோசாப்ட்! ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி முதலிடம்!

click me!