ஆப்பிள் - ஓபன்ஏஐ கூட்டணியை விமர்சிக்கும் வகையில் எலான் மஸ்க் தமிழ் திரைப்பட மீம் ஒன்றையும் தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். அது மூன்று லட்சம் லைக்குகளையும் குவித்துள்ளது.
சமீபத்தில் நடந்த உலகளாவிய டெவலப்பர் மாநாடு 2024 இல் ஆப்பிள் நிறுவனம் OpenAI நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்தது. iOS 18 இயங்குதளம் மூலம் iOS, iPadOS மற்றும் macOS ஆகியவற்றில் ChatGPT ஐ ஒருங்கிணைத்து வருவதாகவும் ஆப்பிள் நிறுவனம் கூறியது.
இந்நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், OpenAI மென்பொருள்களை ஒருங்கிணைத்தால் ஆப்பிள் சாதனங்களை தனது நிறுவனங்களில் பயன்படுத்த தடை செய்யப்போவதாகக் கூறினார்.
ஆப்பிள் - ஓபன்ஏஐ கூட்டணியை விமர்சிக்கும் வகையில் எலான் மஸ்க் தமிழ் திரைப்பட மீம் ஒன்றையும் தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு ஆணும் பெண்ணும் இளநீரை பகிர்ந்து குடிப்பது போன்ற காட்சி உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய நடவடிக்கையால் ஐபோன் பயனர்களின் பிரைவசி கேள்விக்குள்ளாகும் என எலான் மஸ்க் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
iOS 18 ல் கேமிங் மோட் அறிமுகம்! ஐபோன்களில் அட்டகாசமான கேமிங் அனுபவத்துக்கு உத்தரவாதம்!
ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் பிரிவு எவ்வாறு செயல்படுகிறது என்ற தலைப்புடன் இந்த மீம் பகிரப்பட்டுள்ளது. இந்த மீம் 2017ஆம் ஆண்டு வெளியான ‘தப்பாட்டம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் வரும் காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மீம் பகிரப்பட்டது முதல் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் லைக்குகளையும் குவித்துள்ளது. எலான் மஸ்கின் இந்த மீம் பதிவிற்கு விதவிதமான ரிப்ளைகளும் வந்துகொண்டிருக்கின்றன.
"எலோன் இந்தியாவின் மிகவும் பிரபலமான மீம்ஸைப் பகிர்ந்துகொள்கிறார்" என்று ஒரு பயனர் கூறினார். "தமிழ் மீம் கிரியேட்டர்கள் எலான் மஸ்க்கை கவர்ந்துவிட்டனர்" என்று இன்னொருவர் சொல்லியிருக்கிறார்."தமிழ் மீம்ஸ் உலகையே கலக்குகின்றன :-)" என்று மற்றொரு பயனரும் பெருமிதமாகப் பதிவிட்டுள்ளார்.
"இது உண்மையாக இருந்தால், நான் இனி ஆப்பிள் தயாரிப்பு எதையும் பயன்படுத்த மாட்டேன்" என்று ஒரு பயனர் சீரியசாகக் கூறினார். "நிஜமாகவே இது ரொம்ப வேடிக்கையாக இருக்கு. சரியா சொல்லிட்டீங்க" என்று மற்றொரு பயனர் கூறுகிறார்.
சம்பளத்தில் 50% பென்ஷனுக்கு கேரண்டி! புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றும் என்.டி.ஏ. அரசு!