எக்கச்செக்க பணத்தைக் கொட்டி எலான் மஸ்க் தொடங்கும் STEM பல்கலைகழகம்!

By SG Balan  |  First Published Dec 14, 2023, 4:30 PM IST

கடந்த ஆண்டு எலான் மஸ்க் 2.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை 'தி ஃபவுண்டேஷன்' அறக்கட்டளைக்கு வழங்கியிருக்கிறார்.


உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், டெக்சாஸில் ஒரு பல்கலைக்கழகத்தை கட்டத் திட்டமிட்டுள்ளார் என்று ஃபோர்ப்ஸ் அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்காக தொண்டு நிறுவனத்திற்கு 100 மில்லியன்  டாலர் நன்கொடை அளித்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. முதல் கட்டமாக சுமார் 50 மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ப்ளூம்பெர்க்  அறிக்கை சொல்கிறது.

Latest Videos

undefined

ஜோர்ஜியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆணையத்திடம் அங்கீகாரம் பெற்று, 'தி ஃபவுண்டேஷன்' (The Foundation) என்ற தொண்டு நிறுவனம் இந்தப் பல்கலைக்கழகத்தைக் கட்ட உள்ளது. இதற்காக வரிவிலக்கும் கோரப்பட உள்ளதாக ஃபோர்ப்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நோக்கியா 106, 110 கீபேட் போன்களில் 4G வசதி! புதிய ஆப்ஸ், சாப்ட்வேர் அப்டேட்!

இந்தப் பல்கலைக்கழகத்தில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை பணியமர்த்த இருப்பதாகவும் உயர்தர ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக, கடந்த ஆண்டு எலான் மஸ்க் 2.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை 'தி ஃபவுண்டேஷன்' அறக்கட்டளைக்கு வழங்கியிருக்கிறார்.

அறக்கட்டளையின் அறங்காவலர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பல்கலைக்கழகத்தில் இடம் வழங்கப்படாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் என பல நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 243.5 பில்லியன் டாலர்கள் என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பும் எலான் மஸ்க் ஒரு பள்ளியைத் தொடங்கி இருக்கிறார். 2014 இல் தனது ஐந்து குழந்தைகளுக்காகவும் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்களுக்காகவும் Ad Astra என்ற சிறிய தனியார் பள்ளியைத் தொடங்கினார்.

பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் காரிலும் எஞ்சின் ஆயில் மாற்றணுமா?

click me!