
எலோன் மஸ்க் ஒரு வழியாக ட்விட்டருக்கு தலைமை நிர்வாக அதிகாரியைக் கண்டுபிடித்துவிட்டார் போலும். ஆனால் சுவாரஸ்யமாக, ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஒரு மனிதர் அல்ல, ஒரு நாய். அது மஸ்க்கின் செல்ல நாய், ஃபிலோகி ஆகும். எலான் மஸ்க் தனது நாய் ஃப்லோகியை காண்பிடித்து இதற்கு முந்தைய சிஇஓ பராக் அகர்வாலை விட சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் என்று எலான் மஸ்க் நினைப்பதாக கூறப்படுகிறது. 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியவுடன் முதல் வேலையாக எலான் மஸ்க் இதற்கு முந்தைய சிஇஓ பராக் அகர்வாலை நீக்கியிருந்தார். அதன்பிறகு, தற்போது சிஇஓ பதவிக்கு நாய் வைத்துள்ளார்.
எலான் மஸ்க் தனது நாய் சிஇஓ நாற்காலியில் அமர்ந்திருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். படத்தில், ஃப்ளோக்கி ட்விட்டர் பிராண்டட் கருப்பு டி-ஷர்ட்டை அணிவிக்கப்பட்டு, அதில் CEO எழுதப்பட்டுள்ளது. அதன் கால் பாதம் ரேகை வைக்கப்பட்ட, இரண்டு ஆவணங்கள் மேஜையில் உள்ளன. மேலும், ஃப்ளோகி நாயின் முன் ட்விட்டர் லோகோவுடன் சிறிய லேப்டாப் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தைப் பகிர்ந்த எலான் மஸ்க், "ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி அற்புதமானவர்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ட்வீட்டில், ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி “மற்ற” நபரை விட மிகவும் சிறந்தவர் என்று மறைமுகமாக முன்னாள் சிஇஓ பராக் அகர்வாலை சுட்டி காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தனது பொறுப்பில் இருந்து விலகியபோது, பராக் அகர்வால் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட சன்மானம் மொத்தம் $30.4 மில்லியன் ஆகும், இது ஸ்டாக்கில் இருந்து அவருக்கு வழங்கப்பட்டது. எலான் மஸ்க் வந்தபிறகு, பராக் அகர்வாலின் பணிநீக்கம் ஆனார், நிறுவனத்துடனான அவரது பத்தாண்டு கால தொடர்பும் முடிவுக்கு வந்தது.
Jio 5G இப்போது மேலும் 17 நகரங்களில் விரிவாக்கம்! எந்தெந்த இடங்களில் 5ஜி உள்ளன?
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.