
ஜியோ எந்த அறிவிப்பை வெளியிட்டாலும் அது மக்களுக்கு நல்ல ஒரு வரப்பிரசாதமாக தான் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது
இந்நிலையில், எந்த ஒரு பழைய டாங்கிள்களை வழங்கி புதிய ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் பெறுவோருக்கு ரிலையன்ஸ் புதிய சலுகைகளை வழங்குகிறது.
அவ்வாறு புதிய டாங்கிள்களை வாங்கினால், புதிய வைபை ரவுட்டர் மற்றும் ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ஜியோஃபை எக்ஸ்சேஞ்ச் குறுகிய கால சலுகையை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
ஜியோஃபை போர்டபிள் வைபை ரவுட்டரை ரூ.999 செலுத்தி வாங்க வேண்டும்
ஜியோ பிரைம் ரூ.99 மற்றும் ரூ.198 அல்லது ரூ.299 செலுத்தி சிம் கார்டினை ஆக்டிவேட் செய்ய வேண்டும்
உங்களின் பழைய ஜியோ அல்லாத டாங்கிளை ஏதேனும் ஜியோஸ்டோர் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் வழங்க வேண்டும்
பழைய ஜியோ அல்லாத டாங்கிள் அல்லது மோடெமின் சீரியல் நம்பரை வழங்கி, புதிய ஜியோஃபை MSISDN நம்பரை பெற வேண்டும்
ரூ.2200 மதிப்புடைய கேஷ்பேக் ரூ.50 மதிப்புடைய மொத்தம் 44 வவுச்சர்களாக வழங்கப்படும், இவற்றை ரூ.198 மற்றும் ரூ.299 ரீசார்ஜ் செய்ய மட்டும் பயன்படுத்தலாம்.
ஜியோவின் இந்த சலுகையால், மற்ற தொலைதொடர்பு நிருவனங்கள் வழங்கி வரும் இன்ட்ர்நெட் சேவையும் பாதிக்கப் படும் அதாவது, மற்ற நிருவனங்கள் நஷ்டத்தை அடையும்.
ஏற்கனவே ஜியோவுடன் போட்டி போடா முடியாமல் ஏர்செல் நிறுவனம் திவாலானது.
இந்நிலையில், ஜியோ புது டாங்கில் வழங்கி அதன் மூலம், நல்ல சேவையை கொடுக்கும் சமயத்தில் இந்தியா முழுக்க ஜியோ அசைக்க முடியாத ஒரு சக்தியாக மாறிவிடும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.