ஜியோ வெளியிட்ட டேட்டா..! யாரு யாரு என்னென்ன பண்ணி இருக்கீங்கனு தெரியுமா..?  

 |  First Published Apr 28, 2018, 5:18 PM IST
jio announced their quarterly repoert



ஜியோ வெளியிட்ட டேட்டா..! யாரு யாரு என்னென்னு பண்ணி இருக்கீங்கனு தெரியுமா..?  

ரிலையன்ஸ் ஜியோ எப்போது அறிமுகமானதோ...அப்போதிருந்தே மக்களுக்கு பெரும் குஷிதான்...காரணம் ஜியோ அறிவித்த இலவச சேவைக்கு போட்டிபோட்டுக்கொண்டு மக்கள் அதிக ஆர்வத்தோடு ஜியோ சிம் வாங்கி பயன்படுத்தினர்.

Tap to resize

Latest Videos

எனவே ஜியோ உடனான போட்டியை சமாளிக்க முடியாமல்,மற்ற தொலை தொடர்பு நிருவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன.

இந்நிலையில், மார்ச் 31, 2018 வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை ஜியோ வெளியிட்டு உள்ளது.அதில், ரூ.7,128 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. 

இது முந்தைய காலாண்டை விட 3.6% வளர்ச்சியுடன் ரூ.510.44 கோடி லாபம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,எவ்வளவுடேட்டா மக்களால் பயன்படுத்தப் படுகிறது...ஒரு சராசரி  மனிதன்,ஒரு நாளைக்கு மினிமம் எவ்வளவு நிமிடங்கள் கால்ஸ் பயன்படுத்துகின்றனர் என்பன உள்ளிட்ட விவரங்களை ஜியோ வெளியிட்டு உள்ளது  

குறிப்பிட்ட வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாய் மாதம் 137.1 ஆகும். முந்தைய காலாண்டில் மாதம் 154 ஆக இருந்தது. 

வயர்லெஸ் டேட்டா பயன்பாடு 506 கோடி ஜிபி ஆக இருக்கிறது. (மாதம் ஒரு வாடிக்கையாளர் 9.6 ஜிபி)

சராசரி வாய்ஸ் கால் பயன்பாடு நாள் ஒன்றிற்கு 37,218 கோடி நிமிடங்களாக இருக்கிறது. (ஒரு வாடிக்கையாளர் மாதம் 716 நிமிடங்கள்)

ஒரு வாடிக்கையாளரின் மாதாந்திர வீடியோ பயன்பாடு 240 கோடி மணி நேரம். (மாதம் 13.8 மணி நேரம்)

இதனை தொடர்ந்து, ஜியோ இன்னும் பல அதிரடி திட்டத்தை தொடங்க உள்ளது.மேலும் மிக விரைவில் ஜியோ லேப்டாப்  கூட வர சந்தைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

click me!