ஏர்செல் வாடிக்கையாளர்களே...! PORT போட்டும் வேலை செய்யலையா? இதை TRY பண்ணுங்க...!

 |  First Published Feb 23, 2018, 1:06 PM IST
Do not port work TRY THIS



ஏர்செல் வாடிக்கையாளர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் தங்களது ஆதார் பதிவு செய்து  BSNL சிம் கார்டு பெற BSNL வாடிக்கையாளர் சேவை மையம் துரித ஏற்பாடு செய்துள்ளது

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது சேவையை தொடங்கிய ஜியோ, பல்வேறு அதிரடி சலுகைகளையும், இலவசங்களையும் அறிவித்தது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைக்கு மாறினர். 

Tap to resize

Latest Videos

இதனால், ஏர்டெல், ஐடியா, வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் ஏர்செல் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்ப்டடது. 120 கோடி ரூபாயாக இருந்த லாபம், 5 கோடி ரூபாயாக சரிந்தது. 

தனது சேவையை ஏர்செல் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தியது. மேலும் டவர் உரிமையாளர்களுக்கு பாக்கி செலுத்தாததால், ஏர்செல் நிறுவன டவர்கள் அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏர்செல் நிறுவனம் முன்னறிவிப்பின்றி பல்வேறு இடங்களில் தனது சேவையை நிறுத்துவதாக புகார் எழுந்தது. அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மொபைல் எண், போர்டபிலிட்டியில் வேறு நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

AIRCEL ல் இருந்து BSNL க்கு மாற Port SMS பண்ண முடியாமல் தவிக்கும் நண்பர்கள் உடனே அருகிலுள்ள BSNL வாடிக்கையாளர் சேவை மையத்தை அனுகவும். அங்கு தங்களது AIRCEL எண் மற்றும் வேரொரு தொடர்பு எண்னையும் சமர்ப்பிக்கவும். 

 தங்களது MNP க்கு உரிய ஏற்பாடுகளை செய்து அடுத்த 24 மணி நேரத்தில் தங்களது ஆதார் பதிவு செய்து  BSNL சிம் கார்டு பெற BSNL வாடிக்கையாளர் சேவை மையம் துரித ஏற்பாடு செய்துள்ளது. 

click me!