DIZO Watch 2 Sports: டிசோ பிராண்டு இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ரியல்மி டெக்லைஃப் பிரிவின் கீழ் இயங்கும் டிசோ பிராண்டு இந்திய சந்தையில் டிசோ வாட்ச் 2 ஸ்போர்ட்ஸ் பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டிசோ வாட்ச் 2 ஸ்போர்ட்ஸ் மாடலில் 1.69 இன்ச் ஸ்கிரீன், 2.5D கிளாஸ், மெல்லிய குறைந்த எடை ஃபிரேம் உள்ளது.
இத்துடன் இதய துடிப்பு சென்சார், SpO2 டிராக்கிங், ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 10 நாட்களுக்கான பேட்டரி பேக்கப், 20 நாட்களுக்கான ஸ்டாண்ட்-பை வழங்குகிறது.
டிசோ வாட்ச் 2 ஸ்போர்ட்ஸ் அம்சங்கள்
- 1.69 இன்ச் 240x280 பிக்சல் 218 PPI டச் கலர் LCD ஸ்கிரீன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- 3-axis அக்செல்லோமீட்டர், இதய துடிப்பு சென்சார்
- ரோடார் வைப்ரேஷன் மோட்டார்
- ப்ளூடூத் 5
- 110+ ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- ஆட்டோமேடெட் இதய துடிப்பு சென்சார், SpO2சென்சார்
- மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், வானிலை விவரங்கள்
- கால் நோடிபிகேஷன், மெசேஜ் ரிமைண்டர், அலாரம் ரிமைண்டர்
-வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 260mAh பேட்டரி
- 10 நாட்களுக்கான பேட்டரி பேக்கப்
- அதிகபட்சம் 20 நாட்களுக்கான ஸ்டாண்ட்-பை
டிசோ வாட்ச் 2 ஸ்போர்ட் மாடல் கிளாசிக் பிளாக், சில்வர் கிரே, டார்க் கிரீன், பேஷன் ரெட், ஓஷன் புளூ மற்றும் கோல்டன் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2,499 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இந்த வாட்ச் ரூ. 1,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. டிசோ வாட்ச் 2 ஸ்போர்ட் முதல் விற்பனை மார்ச் 8 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.