Telegram மூலமாகவும் ஃபோட்டோவை அட்டகாசமாக எடிட் செய்யலாம்!

By Dinesh TG  |  First Published Oct 5, 2022, 12:27 PM IST

டெலிகிராம் செயலி மூலமாக போட்டோ எடிட் செய்து, ஷேர் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம்


சமூகவலைதளங்களில் வாட்ஸ்அப்க்குப் போட்டியாக இருப்பது டெலிகிராம். இன்னும் சொல்லப்போனால், பல்வே று வசதிகள் டெலிகிராம் செயலிக்கு வந்த பிறகே, வாட்ஸ்அப்பில் வருகிறது. 

தற்போது ஃபோட்டோ எடுப்பதும், அதை எடிட் செய்து ஷேர் செய்வதும் டிரெண்டிங்கில் இருப்பதால், அதற்கு ஏற்ப டெலிகிராம் செயலியிலும் எடிட் ஆப்ஷன்கள் உள்ளன. குறிப்பாக நீங்கள் எடுத்த ஃபோட்டோவில் உள்ள தேவையற்ற பேக்கிரவுண்டை நொடியில் அளித்து விட ஒரு சூப்பர் டிப் உள்ளது.

Tap to resize

Latest Videos

 இதற்கு நீங்கள் டெலிகிராமிலுள்ள சர்ச் பகுதிக்கு செல்லவும். அங்கே AI பேக்கிரவுண்ட் ரிமூவர்  பாட் (AI Background Remover Bot) எனத் தட்டச்சு செய்யவும். அதிலுள்ள ஸ்டார்ட் ஆப்ஷனைக் க்ளிக் செய்யவும்.

மொபைல்ல சார்ஜ் நிக்கலையா? உங்களுக்கான டிப்ஸ் இதோ!

பிறகு உங்களுக்கு விருப்பமான ஃபோட்டோவை தேர்வு செய்து ஷேர் செய்யவும். பின்னர் ஓரிரு நிமிடங்களில் உங்களது ஃபோட்டோவிலுள்ள பேக்கிரவுண்ட் நீக்கப்பட்டு உங்களது ஃபோனிற்கு அனுப்பப்படும். இதிலுள்ள சிறிய சிக்கல் என்ன என்றால் இதனைப் பயன்படுத்தி உங்களால் நாளொன்றிற்கு ஒரு ஃபோட்டோவின் பேக்கிரவுண்டை மட்டுமே நீக்க முடியும்.

உஷாாாார்! ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

இனி ஃபோட்டோவின் பேக்கிரவுண்டை நீக்க எந்த விதமான ஆப்பையும் நீங்கள் பிளே ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. இதனைப் பயன்படுத்தி சுலபமாக உங்கள் வேலையை முடித்துக் கொள்ளலாம்.

click me!