
டெக் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் CMF ஹெட்போன் ப்ரோ, 100 மணி நேர பேட்டரி ஆயுள், அடாப்டிவ் ANC மற்றும் LDAC ஆடியோ ஆதரவுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது. இது Nothing Phone 1-ஐ விட விலை குறைவாக இருக்கும். CMF வர்த்தகத் தலைவர் ஹிமான்ஷு டாண்டனின் X பதிவின்படி, CMF ஹெட்போன் ப்ரோ இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் கிடைக்கும்.
தற்போது ஐரோப்பாவில் விற்கப்படும் இது, அக்டோபர் 7 முதல் அமெரிக்காவில் கிடைக்கும். ஐரோப்பாவில் €100 (சுமார் ரூ.8,900), அமெரிக்காவில் $99 (சுமார் ரூ.8,200) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நத்திங் ஹெட்போன் 1-ஐ விட இதன் விலை ரூ.10,000-க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பிராண்டின் முதல் ஓவர்-இயர் ஹெட்போன். வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி இயர்கப்களை மாற்றிக்கொள்ளலாம். கிரே, கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. பாஸ், வால்யூம் கண்ட்ரோலுக்கு பட்டன்கள் உள்ளன. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 40mm டிரைவர்கள், LDAC மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு, அடாப்டிவ் ANC அம்சம் ஆகியவை உள்ளன. ANC ஆஃப் செய்தால் 100 மணிநேரம், ஆன் செய்தால் 50 மணிநேரம் பேட்டரி நீடிக்கும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.