
சீனா உலகின் முதல் பொது 10G நெட்வொர்க் இணைய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 2 மணிநேரப் படங்களை நொடிகளில் பதிவிறக்கம் செய்யும் திறன் கொண்டது. சீனா யூனிகாமுடன் கூட்டு சேர்ந்து ஹுவாய் நிறுவனம் இந்த இன்டர்நெட் சேவையை வழங்குகின்றன. பெய்ஜிங்கிற்கு அருகிலுள்ள ஹுபெய் மாகாணத்தின் சுனான் கவுண்டியில் தனது முதல் 10G பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இணைய உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று அந்நாட்டு தொழில்நுட்ப ஊடகமான MyDrivers கூறியுள்ளது. 10G பிராட்பேண்ட் நெட்வொர்க் நிறுவப்பட்டுள்ள ஹுபெய் மாகாணம் சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக உருவெடுத்து வரும் பகுதியாகும். இந்த அதிவேக நெட்வொர்க் உலகின் முதல் 50G PON (Passive Optical Network) தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது.
ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்கின் மையக் கட்டமைப்பிற்கான மேம்படுத்தல்கள் வியத்தகு செயல்திறனை அதிகரித்துள்ளன. இன்டர்நெட் வேகத்தை அதிகரித்துள்ளது. இதன் மூலம் சுமார் 2 மணிநேரம் ஓடக்கூடிய, 20GB அளவுள்ள 4K வீடியோவை 20 விநாடிகளுக்குள் டவுன்லோட் செய்யலாம்.
இந்த நெட்வொர்க் மூலம் மூன்று மில்லி விநாடிகளில் 9,834 Mbps டேட்டாவை டவுன்லோட் செய்யலாம். 1,008 Mbps அப்லோடு வேகத்தையும் பெறலாம். இது ஏற்கனவே வீடுகளில் உள்ள பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகத்தை விட பலமடங்கு அதிக வேகம் என்பது குறிப்பிடத்தக்து.
இந்த முன்னேற்றம் அதிவேக இன்டர்நெட் தேவைப்படும் 8K வீடியோ ஸ்ட்ரீமிங், மேம்பட்ட கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் அதிவேக வெர்சுவல் ரியாலிட்டி பயன்பாடுகளுக்கு புதிய வழியாக இருக்கும். இதன் மூலம் சீனா அடுத்த தலைமுறை நெட்வொர்க்கை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளதை நிரூபித்துள்ளது.
ஏற்கெனவே ஜனவரி 2025க்குள் 4.25 மில்லியன் 5G பேஸ் ஸ்டேஷன்களை நிறுவியுள்ளது - இது உலகளவில் மிக அதிகம். தொழில்நுட்ப வரம்புகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. சாங் குவாங் சாட்டிலைட் தொழில்நுட்பம் செயற்கைக்கோள் லேசர் தொடர்பு மூலம் நொடிக்கு 100 Gbit டேட்டா பரிமாற்ற வேகத்தை அடைந்துள்ளது. இது ஸ்டார்லிங்கின் செயல்திறனைவிட பத்து மடங்கு அதிகம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.