Airtel Plan: குறைந்த விலையில் ஐபிஎல் போட்டிகளை பார்க்கலாம்! ஏர்டெல்லின் செம பிளான்!

Published : Apr 18, 2025, 08:31 PM IST
Airtel Plan: குறைந்த விலையில் ஐபிஎல் போட்டிகளை பார்க்கலாம்! ஏர்டெல்லின் செம பிளான்!

சுருக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஏர்டெல் ரூ.451 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிளானின் முழு விவரங்களை பார்க்கலாம்.

Airtel IPL JIO HOTSTAR PLAN: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டிகள் விறுவிறுப்பாக சென்று வரும் நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் போட்டிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. கிரிக்கெட் போட்டிகளை முழுமையாக அனுபவிக்க மொபைலில் போதுமான டேட்டா இருப்பது அவசியமாகும். இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல்லின் புதிய பிளான்

ஏர்டெல்லின் புதிய ரூ.451 ரீசார்ஜ் திட்டம் ஜியோ சினிமாவுக்கான அணுகலுடன் கூடுதலாகக் கணிசமான டேட்டா கொள்ளளவை வழங்குகிறது. இது சேவை செல்லுபடியாகும் காலம் இல்லாத டேட்டா வவுச்சர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வவுச்சர் செயல்பட, பயனர்கள் செயலில் உள்ள அடிப்படைத் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். 

ரூ.451 ரீசார்ஜ் திட்டத்தில் என்னென்ன நன்மைகள்? 

இந்த 30 நாள் ரீசார்ஜ் பிளானில் பயனர்கள் 50ஜிபி டேட்டாவைப் பெறலாம். இதில் மூன்று மாத ஜியோ ஹாட்ஸ்டார்  சந்தாவும் அடங்கும். இந்தத் திட்டம் ஐபிஎல் ரசிகர்களுக்காக ஏர்டெல் வடிவமைத்த மூன்றாவது சலுகையாகும். ரூ.100 மற்றும் ரூ.195 என இரண்டு டேட்டா வவுச்சர்களை ஏற்கனவே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.195 திட்டம் 15ஜிபி டேட்டா மற்றும் மூன்று மாத ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது, அதே நேரத்தில் ரூ.100 திட்டம் 5ஜிபி டேட்டா மற்றும் 30 நாள் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது.

உலகிலேயே 3வது பெரிய OTT! ஐபிஎல் தொடரை வைத்து கோடிக்கணக்கான ரசிகர்களை அள்ளிய Jio Hotstar

பத்து நிமிடங்களில் சிம் கார்டு டெலிவரி 

சேவை செல்லுபடியாகும் காலத்துடன்  ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவையும் இணைக்கும் ரீசார்ஜைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3999, ரூ.549, ரூ.1029 மற்றும் ரூ.398 என ஏர்டெல்லில் பல விருப்பங்கள் உள்ளன.இதற்கிடையில், பார்தி ஏர்டெல் மற்றும் பிளிங்கிட் ஆகியவை இணைந்து, பத்து நிமிடங்களில் சிம் கார்டுகளை உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்ய எளிய மற்றும் விரைவான முறையை வழங்குகின்றன. இந்த சேவை பதினாறு இந்திய நகரங்களில் வழங்கப்படுகிறது. மொபைல் சேவைகளுடன் இணைவதை மக்களுக்கு எளிதாக்குவதே இதன் நோக்கம் ஆகும்.

வெறும் ரூ.299க்கு 2.5ஜிபி டேட்டா; அதுவும் 1 மாதத்திற்கு - Jioவின் அசத்தலான ஆஃபர் பத்தி தெரியுமா?

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல்: ரூ.14,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 10! வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
அனுமதி இல்லாமல் போட்டோவை பயன்படுத்தினால் சிறை?.. டீப் ஃபேக் மசோதா சொல்வது என்ன? முழு விவரம் இதோ!