ஏஜென்டிக் AI: இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்திற்கான திருப்புமுனை

ஏஜென்டிக் AI இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான இயந்திரமாக வளர்ந்து வருகிறது. நம்பிக்கை, தனியுரிமை மற்றும் இணக்கம் ஆகியவை AI அர்த்தமுள்ள தாக்கத்தை வழங்குவதை உறுதி செய்வதற்கு அடித்தளமாக உள்ளன.

Agentic AI: A Game-Changer for India's Economic Future

ஆசிரியர்: சபாஸ்டியன் நைல்ஸ், தலைவர் & தலைமை சட்ட அதிகாரி, சேல்ஸ்ஃபோர்ஸ்

வெறும் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் இருந்து, நம் சார்பாக முடிவுகள் எடுப்பது, தன்னாட்சி முறையில் செயல்படுவது என ஒரு சக்திவாய்ந்த தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகம் ஏஜென்டிக் AI இன் அடுத்த எல்லைக்குள் நுழையும்போது - AI தன்னாட்சி முறையில் பணிகளைச் செய்கிறது, முடிவுகளை எடுக்கிறது மற்றும் பகுப்பாய்வு செய்கிறது - இந்தியா ஒரு தனித்துவமான திருப்புமுனையில் நிற்கிறது. அதன் பரந்த, இளம் மற்றும் டிஜிட்டல் அதிகாரம் பெற்ற மக்கள்தொகை, துடிப்பான ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் முன்னோடி டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன், இந்தியா AI தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதால், அது இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. பொது சேவை வழங்கலை மாற்றுவது, வணிக கண்டுபிடிப்புகளை இயக்குவது அல்லது டிஜிட்டல் உள்ளடக்கத்தின் புதிய மாதிரிகளை உருவாக்குவது என எதுவாக இருந்தாலும், AI இனி ஒரு தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது மட்டுமல்ல - அது இந்தியாவின் உள்ளடக்கிய வளர்ச்சி, பொருளாதார மீள்தன்மை மற்றும் உலகளாவிய போட்டித்தன்மைக்கு ஒரு முக்கியமான காரணியாக வளர்ந்து வருகிறது.

Latest Videos

ஏஜென்டிக் AI இந்தியாவிற்கு ஒரு மகத்தான வாய்ப்பை வழங்குகிறது. ஆனால் குறிப்பிடத்தக்க பொறுப்பையும் வழங்குகிறது. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட, சிக்கலான ஒரு நாட்டிற்கு, AI பயன்பாட்டின் வெற்றி உற்பத்தித்திறன் அல்லது தானியங்கு செயல்பாடுகளால் மட்டும் அளவிடப்படாது; மாறாக, இந்த அமைப்புககளின் நம்பகத்தன்மை, நெறிமுறைகள் மற்றும் உள்ளடக்கிய தன்மை மூலமும் அளவிடப்படும். ஒவ்வொரு குடிமகனுக்கும், வணிகத்திற்கும், நிறுவனத்திற்கும் AI அர்த்தமுள்ள தாக்கத்தை வழங்குவதை உறுதிசெய்வதற்கு அவை அடித்தளமாக உள்ளன.

AIக்கு நம்பிக்கையே முக்கியம்:

AI ஏஜெண்டுகள் பணிகளைத் தானாகவே செய்து முடிக்கவும், புதிய தகவல்களுக்கு ஏற்ப மாற்றவும், முன்வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் முடிவுகளை எடுக்கவும் வல்லவை. இந்த அமைப்புகள் ஈர்ப்பைப் பெறுவதற்கு நம்பிக்கை அவசியம். இந்த AI ஏஜெண்டுகளுக்கு சக்தி அளிக்கும் தரவைப் புரிந்துகொள்வது, முடிவெடுப்பதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது மற்றும் வணிக இலக்குகளுடன் செயல்கள் ஒத்துப்போவதை உறுதி செய்வதன் அடிப்படையில் இந்த நம்பிக்கை கட்டமைக்கப்பட்டுள்ளது.

முன்னணி பிராண்டுகள் ஏற்கனவே இந்தத் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. உதாரணமாக, Saks , வாடிக்கையாளர் ஆர்டர்களைப் புதுப்பிக்கவும், வாடிக்கையாளர் பிரதிநிதிகளுக்கு AI-சார்ந்த பரிந்துரைகளை வழங்கவும் AI ஏஜெண்டுகளைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் Unity Environmental University பிரத்யேகமான மாணவர் ஆலோசனை சேவைகளை அளவிட இதனைப் பயன்படுத்துகிறது. இந்த எடுத்துக்காட்டுகள் AI ஏஜெண்டுகள் மூலம் எவ்வாறு செயல்திறனை மேம்படுத்தலாம், புதுமைகளை ஊக்குவிக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

இருப்பினும், அவற்றின் வெற்றி பொறுப்பான செயல்படுத்தலைச் சார்ந்தது. வலுவான தரவு நிர்வாகம், வடிவமைப்பு மற்றும் தனியுரிமைக் கொள்கைகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம், AI ஏஜெண்டுகள் தரவை நெறிமுறையாகவும் வெளிப்படையாகவும் செயலாக்குவதை உறுதிசெய்கிறோம். AI முன்னேற்றங்களுக்கு ஏற்ப ஒழுங்குமுறை கட்டமைப்புகள் உருவாகி வருவதால், மனித மேற்பார்வை மிக முக்கியமானது.

இந்தியா: AI துறையில் வளர்ந்து வரும் சக்தி

AI கண்டுபிடிப்புகளின் அடுத்த அலை தொழில்நுட்பத்தால் மட்டும் வரையறுக்கப்படாது. அளவிலும், வேகத்திலும், பொறுப்புடனும் பயன்படுத்தக்கூடிய நாடுகளால்தான் AI கண்டுபிடிப்புகளை மதிப்பிடப்படும். இந்தியா அந்த உலகளாவிய சக்தி மையங்களில் ஒன்றாக வேகமாக வளர்ந்து வருகிறது. 2027ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் AI சந்தை 25 –35% CAGR இல் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முற்போக்கான அரசாங்கக் கொள்கைகள், செழிப்பான டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் உலகின் இளைய மற்றும் மிகவும் துடிப்பான டெவலப்பர்கள் போன்றவை இத்துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கான காரணிகளாக அமையும்.

IndiaAI மற்றும் சிறப்பு மையங்களை நிறுவுதல் போன்ற அரசாங்க முயற்சிகள், பொது சேவைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் நிதி சேவைகள் மற்றும் சில்லறை விற்பனை வரை அனைத்துத் துறைகளிலும் AI பயன்பாட்டுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கி வருகின்றன.

இந்தியா செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அதன் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் முன்னணியில் உள்ளது. உலகின் மிகப்பெரிய டெவலப்பர் சமூகங்களில் ஒன்றான இந்தியா, இந்த உத்வேகத்தை உணர முடிகிறது. 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் செயல்பாடுகளை நிறுவியதிலிருந்து, மில்லியன் கணக்கான இந்திய டெவலப்பர்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துதல் மற்றும் வணிக வளர்ச்சியை அளவிடுதல் போன்ற வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக மாறுவதைக் கண்டோம்.

பாரதத்திற்கான செயற்கை நுண்ணறிவு: 2047ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு

எதிர்காலத்தைப் பொறுத்தவரை, 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் “விக்சித் பாரத்” (வளர்ந்த இந்தியா) என்ற தொலைநோக்குப் பார்வையில் AI ஒரு முக்கிய பங்கை வகிக்கத் தயாராக உள்ளது. வணிகங்களுக்கான ஒரு கருவியாக இருப்பதைவிட, நாட்டு மக்களை மேம்படுத்துவதற்காக, சிறந்த வேலைவாயப்பு, பரந்த வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் விரைவான, விவரமான முடிவுகளை செயல்படுத்த AI உதவுகிறது. AI தீர்வுகளில் நம்பிக்கை, தனியுரிமை மற்றும் மனித மேற்பார்வையை உறுதிசெய்வதன் மூலம், இந்தத் தொழில்நுட்பம் வணிகங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயனளிப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் AI இல் உள்ளது. நம்பிக்கை, தனியுரிமை மற்றும் இணக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. AI தீர்வுகள் சக்திவாய்ந்தவையாக இருப்பது மட்டுமின்றி, பொறுப்பானவையாகவும் உள்ளன. அவை வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நீண்டகால பங்களிப்பை அளிக்கும்.

***

இது "சம்பவனா" - தொழில்நுட்பத்தில் வாய்ப்புகள் - என்ற தொடரின் ஒரு பகுதியாகும் . ஏப்ரல் 11-12 இல் பொது அமர்வுகளுடன் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்படும் உச்சிமாநாடு பற்றிய கூடுதல் தகவலுக்கு, https://bit.ly/JoinGTS2025AN ஐப் பார்வையிடவும் .

vuukle one pixel image
click me!