இந்த வாரத்தில் பல நாட்டுச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு வரும் ஆல்ட்மேன், தலைவர்கள் மற்றும் தொழிலபதிர்களை சந்நித்து உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
OpenAI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ChatGPT ஐ உருவாக்கியதன் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் இந்த வாரம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் இந்தியா, இஸ்ரேல், ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்குச் செல்வதால் உற்சாகமாக இருப்பதாக சாம் ஆல்ட்மேன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரக்யா தாக்கூருடன் கேரளா ஸ்டோரி படம் பார்த்த பெண் முஸ்லிம் காதலருடன் மாயம்!
excited to visit israel, jordan, qatar, the uae, india, and south korea this week!
— Sam Altman (@sama)வலுவான தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பெரிய தரவுத் தொகுப்பைக் கொண்டிருக்கும் இந்தியாவின், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மிகப்பெரிய அளவில் பயன்படுத்த முடியும். இந்த ஆண்டு பிப்ரவரியில் நாஸ்காம் (NASSCOM) தரவை மேற்கோள் காட்டி அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் ஒட்டுமொத்தமாக சுமார் 416,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துறையின் வளர்ச்சி விகிதம் சுமார் 20-25 சதவீதம் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது.
2035 ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு $957 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.79,00,300 கோடி) பங்களிப்பை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மனித உழைப்பைக் குறைப்பதற்காக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. மேலும், இந்த தொழில்நுட்பம் வளரும்போது வேலை இழப்பு அதிகரிக்கும் என்றும் அச்சம் உள்ளது.
மேக் புக் வாங்கணுமா! வந்தாச்சு 15 இன்ச் மேக் புக் ஏர்! ஆப்பிள் கொடுத்த அட்டகாசமான அப்டேட்!
இதற்கிடையில், கடந்த வாரம் OpenAI நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன், தங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை அழிக்காது என்று கூறினார். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி பற்றிய அச்சத்தைத் தணிக்கும் வகையில், இவ்வாறு கூறிய ஆல்ட்மேன், "மனிதர்களுக்கு எந்த வேலையும் இல்லை அல்லது எந்த வாய்ப்பும் இல்லை என்ற நிலைக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முன்னேறப் போகிறது என்ற இந்த எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை" என்றும் சொல்கிறார்.
பேட்டி ஒன்றில் பதில் அளித்த ஆல்மேன், "ஏற்கனவே AI ஐப் பயன்படுத்தி கதைகளை உருவாக்குகிறார்கள். நாங்கள் அதற்குப் மாறாக, ஒரு ஆராய்ச்சியாளருக்கு 100 உதவியாளர்கள் வழங்கும் யோசனைகளை வழங்குவது போல ChatGPT இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம்" என்றார்.
மார்டன் மாமி யூடியூப் சேனல் மூலம் ரூ.1.5 கோடி மோசடி செய்த கோவை பெண் உள்பட 3 பேர் கைது
இந்நிலையில், இந்த வாரத்தில் பல நாட்டுச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு வரும் ஆல்ட்மேன், தலைவர்கள் மற்றும் தொழிலபதிர்களை சந்நித்து உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இந்தப் பயணம் இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப ஆர்வலர்களால் உற்று கவனிக்கப்படும்.
அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். மும்பை மற்றும் டெல்லியில் ஆப்பிள் ஸ்டோர்களைத் திறந்துவைக்க வந்த அவர், பிரதமர் மோடி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோரையும் சந்தித்தார்.
இனி ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் ஜாம் இருக்காது! நெடுஞ்சாலைத்துறை கொண்டுவரும் புதிய திட்டம்!