மேக் புக் வாங்கணுமா! வந்தாச்சு 15 இன்ச் மேக் புக் ஏர்! ஆப்பிள் கொடுத்த அட்டகாசமான அப்டேட்!

By SG BalanFirst Published Jun 6, 2023, 12:51 PM IST
Highlights

15 இன்ச் மேக்புக் ஏர், மிட்நைட், ஸ்டார்லைட், சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ.124,900 முதல் ரூ.134,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் திங்களன்று 15 இன்ச் மேக்புக் ஏர் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த புதிய மேக்புக் லேப்டாப் 15.3 இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே, M2 சிப் மற்றும் 18 மணிநேரம் நீடிக்கக்கூடிய பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

M2 சிப் உடன் கூடிய மேக்புக் ஏர் இப்போது விற்பனைக்கு வந்துவிட்டது. ஆன்லைனில் இப்போதே ஆர்டர் செய்யலாம். ஆப்பிள் ஸ்டோர் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட ஆப்பிள் விற்பனையாளர்களிடம் ஜூன் 13 முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.

Latest Videos

15 இன்ச் மேக்புக் ஏர், மிட்நைட், ஸ்டார்லைட், சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ.124,900 முதல் ரூ.134,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மார்டன் மாமி யூடியூப் சேனல் மூலம் ரூ.1.5 கோடி மோசடி செய்த கோவை பெண் உள்பட 3 பேர் கைது

"நம்பமுடியாத செயல்திறன் மற்றும் அற்புதமான வடிவமைப்புடன், புதிய மேக்புக் ஏர் உலகின் சிறந்த 15-இன்ச் லேப்டாப் ஆகும். இது ஆப்பிள் மூலம் மட்டுமே சாத்தியம்" என ஆப்பிள் நிறுவனத்தின் ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவு மூத்த துணைத் தலைவர் ஜான் டெர்னஸ் கூறியுள்ளார்.

விரிவான லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே (Liquid Retina display) மற்றும் மெல்லிய இல்லாத வடிவமைப்பு, அசாதாரணமான பேட்டரி ஆயுள் மற்றும் ஆறு-ஸ்பீக்கர் ஒலி அமைப்பு என அட்டகாசமான சிறப்பு அம்சங்கள் அனைத்தையும் புதிய மேக்புக் ஏர் (MacBook Air) கொண்டுள்ளது. இத்துடன் புதிய மேக் ஸ்டுடியோ (Mac Studio) மற்றும் மேக் ப்ரோ (Mac Pro) ஆகியவற்றையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேக் ஸ்டுடியோ ரூ.188,900 முதல் ரூ.209,900 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டவர் மற்றும் ரேக் பொருத்தப்பட்ட உறைகள் இரண்டிலும் கிடைக்கும். மேக் ப்ரோ (டவர் என்க்ளோசர்) ரூ.687,900 முதல் ரூ.729,900 வரை விலை கிடைக்கிறது.

WWDC 2023: Apple WWDC 2023 நிகழ்ச்சியில் வெளியாகும் iOS 17.. எப்போது டவுன்லோட் செய்ய முடியும்?

மேக் ஸ்டுடியோ (Mac Studio) ஆனது M2 Max மற்றும் புதிய M2 Ultra ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது. அவற்றின் செயல்திறன் பெருமளவு அதிகரித்துள்ளது. பிரமிக்க வைக்கும் வகையில் சிறிய வசதியான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

மேக் ஸ்டுடியோ சக்திவாய்ந்த இன்டெல் பிராசஸர் அடிப்படையிலான 27 இன்ச் ஐ மேக் 1 (iMac 1) லேப்டாப்பை விட 6 மடங்கு வேகமானது. மேக் ப்ரோ, இப்போது M2 அல்ட்ரா பிராசஸரைக் கொண்டுள்ளது. இது இன்டெல் பிராசஸரைக் கொண்ட பழைய மாடல் மேக் ப்ரோவை விட 3 மடங்கு வேகமானது. 192 ஜிபி வரை மெமரியுடன் கூடிய மேக் ப்ரோ M2 அல்ட்ரா மற்றும் மேக் ஸ்டுடியோ ஆகியவை மேம்பட்ட கிராபிக்ஸ் கார்டுகளைக் கொண்டுள்ளன.

பிரக்யா தாக்கூருடன் கேரளா ஸ்டோரி படம் பார்த்த பெண் முஸ்லிம் காதலருடன் மாயம்!

click me!