இந்த ஸ்மார்ட்வாட்ச் வெறும் ரூ.2,000 னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க!

By Asianet Tamil  |  First Published Mar 13, 2023, 3:57 PM IST

Fire-Boltt தரப்பில் புதிதாக Fire-Boltt Eterno என்ற ஸ்மார்ட்வாட்ச் உள்ளது. குறைந்த விலையில், அதிகப்படியான அம்சங்களுடன் இந்த வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Fire Boltt Eterno launched in india at Rs.1999 with split screen Largest Display, Bluetooth Calling, AI Voice Assistant

ஸ்மார்ட்வாட்ச் என்றாலே சுமார் 4 ஆயிரம் ரூபாய்க்கு மேலான வாட்ச்களில் தான் வசதிகள், அம்சங்கள் அதிகமாக இருக்கும். ஆனால், சமீபகாலமாக குறைந்தவிலையில் கூட அதிக அம்சங்கள் நிறைந்த வாட்ச்கள் அறிமுகமாகின்றன. அந்த வரிசையில் தற்போது Fire Boltt நிறுவனத்தின் புதிய வாட்ச்சும் இடம் பெற்றுள்ளது. இதன் பெயர்  Fire Boltt Eterno ஆகும். 

இதில் 1.99" டிஸ்ப்ளே அளவில் பெரிய டச் ஏரியா உள்ளது. அதற்கு ஏற்ப 240*283 பிக்சல், 500 NITS வரையிலான பிரைட்னஸ் உள்ளது. இதில் மிகப் பெரிய டிஸ்ப்ளே  இருப்பதால், வாட்ச்சானது பெசல் பகுதியில் அதிக ஆக்கிரமிப்பு இல்லை. வாடிக்கையாளர் எளிதா டச் செய்து, கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். வாட்ச்சில் தெரியும் எழுத்துக்களும் நல்ல பெரியதாக இருப்பதால், தேவையான விஷயங்களை எளிதாக பார்க்கலாம். உற்று நோக்கி பார்க்க வேண்டிய அவசியமில்லை. 

Tap to resize

Latest Videos

undefined

மேம்பட்ட சிப்செட், சமீபத்திய புளூடூத் தொழில்நுட்பம், புளூடூத் காலிங் முறை வழங்கப்பட்டுள்ளது. எனவே, பயணத்தின்போது கூட கால் செய்யலாம், வரக்கூடிய இன்கமிங் கால்களை பார்க்கலாம். அதே போல், இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது AI வாய்ஸ் அசிஸ்டெண்ட்டும் உள்ளது. 

குறிப்பாக 120க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள் உள்ளன. மேம்படுத்தப்பட்ட சென்சார்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் அனைத்து செயல்பாடுகளும் சரியாக கண்காணிக்கலாம்.  சும்மா இருக்கும் போது, போர் அடித்தால், சிறிது நேரம் ஸ்மார்ட்வாட்ச்சில் கேம்ஸ் விளையாடலாம். இதற்காக சில பில்ட் இன் கேம்ஸ்கள் உள்ளன. 

மொபைல் போனைப் போலவே இந்த ஸ்மார்ட்வாட்சிலும் ஸ்பிலிட் ஸ்கிரீன் என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் நீங்கள் சமீபத்தில் பயன்படுத்திய செயல்பாடுகள், அம்சங்களை எளிதாக ஒரே திரையை இரண்டாக பிரித்து பார்க்கலாம். 100க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்கள், கிளவுட் அடிப்படையிலான வாட்ச் பேஸ்களாக வழங்கப்படுகின்றன. எனவே, ஒவ்வொரு நாளும் புதிய தோற்றத்துடன் வாட்ச்சை பயன்படுத்தலாம். 

Fire-Boltt Eterno வாட்ச் ஏற்கெனவே விற்பனைக்கு வந்துவிட்டது. வாடிக்கையாளர்கள் இதனை அமேசான் தளத்தில் சென்று ஆர்டர் செய்துகொள்ளலாம். மொத்தம் ஆறு வகையான நிறங்களில் வருகிறது. விலை 2 ஆயிரம் ரூபாய் ஆகும்.

vuukle one pixel image
click me!