கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1338 கோடி அபராதம்! மத்திய அரசு அதிரடி

By Dinesh TG  |  First Published Oct 20, 2022, 10:14 PM IST

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் விற்பனையில் சர்வதிகார போக்கை கையாள்வதாக கூகுள் நிறுவனத்துக்கு மத்திய அரசு 1337.76 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.


மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் பெருநிறுவனங்களின் கட்டுபாடற்ற போக்கிற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒருசில தினங்களுக்கு முன்பு ஓயோ, மேக் மை டிரிப் போன்ற ஆன்லைன் டிராவல் ஹோட்டல் புக்கிங் நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதித்தது. இந்த நிலையில், தற்போது கூகுள் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

CCI imposes monetary penalty of ₹ 1337.76 crore on Google for abusing dominant position in multiple markets in the Android Mobile device ecosystem.
Press Release: https://t.co/sXXA0RvK51 pic.twitter.com/FE5Yh8PWr4

— CCI (@CCI_India)


இதுகுறித்து மத்திய அரசின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ஐந்து பக்கங்களைக் கொண்ட செய்திகுறிப்பை வெளியிட்டுள்ளது.  அதன்படி, கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனையில், நியாயமற்ற போட்டி முறைகளைப் பின்பற்றுவதாகவும், சர்வதிகார போக்கை கையாள்வதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதனை கண்டித்து கூகுள் நிறுவனத்துக்கு 1338 கோடி ரூபாய் அபராதம் விதித்து மத்திய அரசின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Tap to resize

Latest Videos

Google Pixel 7 Pro ஸ்மாரட்போனில் கோளாறு! பயனர்கள் புகார்!!

மேலும், கூகுளின் தேடல் சேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஸ்மார்ட்போன்களில் புகுத்தும் வகையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது என்றும் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக கூகுள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை குறித்து ஒழுங்கு முறை ஆணையம் முழுமையாக விசாரணை செய்துள்ளது. விசாரணையின் போது, ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக கூகுள் நிறுவனம் எதிர்கொள்ளும் வர்த்தக போட்டிகளை குறித்து வாதிடப்பட்டது. அப்போது இருநிறுவனங்களின் வர்த்தக மாடல்களை ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்தது. 

பலருக்கும் தெரியாத G board கீபோர்டு டிரிக்ஸ்! இனி இப்படி கூட மெசேஜ் அனுப்பலாம்!!

அதில், ஆப்பிள் நிறுவனம் உயர்தர ஸ்மார்ட்போன்களில் அதன் சொந்த தயாரிப்புகளில் ஆதிக்கம் செலுத்தி வருவது தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், கூகுள் நிறுவனமோ பயனர்களின் எண்ணிக்கையை இலக்காகக் கொண்டு இதர ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வர்த்தக ஆதிக்கத்தை செலுத்துவது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆன்லைன் விளம்பர சேவைகளின் விற்பனையை நேரடியாகப் பாதிக்கும் வகையில் கூகுளின் தேடல் சேவை இருப்பது தெரியவந்துள்ளது.

click me!