சத்ய நாதெல்லா
இந்தியாவில் ஸ்கைப் லைட் செயலியை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா நேற்று தொடங்கி வைத்தார் .
இதற்கு முன்னதாக 3 ஜி மற்றும் 4ஜி மூலம் மட்டுமே வீடியோ காலிங் செய்ய முடிந்தது. இதனால், 2ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வீடியோ காலிங் வசதி இல்லாமல், சற்று சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், 2ஜி சேவையை பயன்படுத்தி, வீடியோ காலிங் செய்யும் வசதியை,அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் , வீடியோ கால், குறுந்தகவல், ஆடியோ கால் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ளே ஸ்டோர்
கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும், 13 எம்பி அளவு கொண்ட ஸ்கைப் லைட் செயலியை டவுன்லோடு செய்து, மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் அல்லது ஸ்கைப் ஐடி மூலம் செயலியை பயன்படுத்த துவங்கலாம்.
இந்தியாவில் பெரும் வரவேற்பு
வாட்ஸ்அப், ஹைக் உள்ளிட்ட செயலிகள் மக்கள் மத்தியில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 2ஜி சேவையை பயன்படுத்தி, வீடியோ காலிங் செய்யும் முறை அறிமுகம் செய்யப் பட்டுள்ளதால், இந்த செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது