-253°C உறைநிலையில் தாக்குப் பிடிக்குமா சந்திரயான்-3? நிலவின் தென்துருவத்தை உற்றுநோக்கும் விஞ்ஞானிகள்!

By SG Balan  |  First Published Sep 13, 2023, 3:34 PM IST

வெப்பமூட்டும் கருவி ஏதும் இல்லாததால், சந்திரயான்-3 இன் லேண்டரும் ரோவரும் மீண்டும் செயல்படுவது நிச்சயமற்றது. அதனால் இஸ்ரோவும் அதிர்ஷ்டத்தையே நம்பியுள்ளது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 'சந்திராயன்-3' வெற்றியும் அதைத் தொடர்ந்து செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சூரியனை ஆய்வு செய்யும் 'ஆதித்யா எல்-1' விண்கலமும் உலகம் முழுவதும் இந்தியாவை நோக்கி கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக மென்மையா தரையிறக்கம் செய்தது. பின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. நிலவில் 14 நாட்கள் பகலாகவும் 14 நாட்கள் இரவாகவும் இருக்கும் என்பதால் இஸ்ரோ, பகல் பொழுதில் சூரிய சக்தி ஆற்றலை பயன்படுத்தி ஆய்வுகள் செய்யும் வகையில் சந்திரயான்-3 திட்டத்தை உருவாக்கியது.

Tap to resize

Latest Videos

சூரிய ஒளி இருக்கும் பகல் நேரத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் இரண்டும் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கியதும் உறக்கநிலைக்குச் சென்றுவிட்டன. செப்டம்பர் 22ஆம் தேதி நிலவில் திரும்ப பகல் பொழுது வரும்போது லேண்டர், ரோவர் இரண்டையும் மறுபடியும் இயங்க வைக்க முடியுமா என்று பார்க்க இஸ்ரோ விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள்.

ஐபோன் 15 சீரிஸில் USB-C சார்ஜிங் வந்தது ஏன்? ஐரோப்பிய யூனியன் போட்ட கறாரான கன்டிஷன் தான் காரணமாம்!

ஆனால், நிலவின் இரவுப் பொழுதைக் கடந்து லேண்டரும் ரோவரும் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா என்பது சந்தேகத்திற்கு இடமானதாகவே இருக்கிறது. ஏனென்றால், நிலவின் தென்துருவப் பகுதி நம்பமுடியாத அளவிற்கு குளிர்ச்சியாக இருக்கும். வெப்பநிலை மைனஸ் 424 டிகிரி பாரன்ஹீட் (அல்லது மைனஸ் 253 டிகிரி செல்சியஸ்) வரை இருக்கும். இந்த அளவுக்குத் தீவிரமான குளிரில் எந்த இயந்திரமும் செயலிழந்து போவது சகஜம்.

சந்திரயான்-3 இன் லேண்டர், விக்ரம் இரண்டிலும் வெப்பமாக்கல் அமைப்புகள் ஏதும் இல்லை என்பதால் நிலவின் குளிரைத் தாங்கும் சக்தி இருக்காது. கடுமையான குளிரை எதிர்த்துப் போராட, ரேடியோ ஐசோடோப் ஹீட்டர் யூனிட் (RHU) எனப்படும் கருவியை பயன்படுத்தியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தக் கருவி இயற்கையாகவே வெப்பத்தை வெளியிடுவதன் மூலம் விண்கலத்தின் உபகரணங்கள் செயலிக்காத வகையில் வைத்திருக்கும்.

இதுபோன்ற கருவி ஏதும் இல்லாமல், சந்திரயான்-3 இன் லேண்டரும் ரோவரும் மீண்டும் செயல்படுவது நிச்சயமற்றது. அதனால் இஸ்ரோவும் அதிர்ஷ்டத்தையே நம்பியுள்ளது.

ரஷ்யாவின் லுனோகோட் 1, முதலில் நிலவில் மென்மையான தரையிறக்கம் செய்தது. வெறும் 10 மாதங்களில் 10 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்தது. சோலார் பேனல்கள் மூலம் இயக்கப்பட்ட லூனாகோட் 1 இன் ரோவர், இரவு நேரங்களில் பொலோனியம்-210 ரேடியோஐசோடோப் ஹீட்டரை பயன்படுத்தி, தேவையான வெப்பத்தைப் பெற்றது.

2013 இல் நிலவின் வடமேற்குப் பகுதியில் லுனோகோட் 1 இன் இருப்பிடத்தில் இருந்து வெகு தொலைவில் சீனாவின் Chang'e-3 இன் தரையிறங்கியது. அதன் லேண்டர் மற்றும் ரோவர் இரண்டும் நிலவில் இரவுகளில் பொழியும் பனியைத் தாங்குவதற்கான அமைப்புகளைக் கொண்டவை.

Apple Watch Series 9: புதிய டிஸ்பிளே... ஹைஸ்பீடு பிராசஸர்... அட்டகாசமான ஆப்பிள் வாட்ச் சீரிஸ் அறிமுகம்

click me!