
இந்தியாவில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் 5G ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. ரியல்மி நிறுவனம் தனது புதிய Realme P3 Lite 5G ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 13 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
வடிவமைப்பு
இந்த போன் மிக இலகுவான (197 கிராம்) மற்றும் மெலிதான (7.94 மிமீ) வடிவமைப்புடன் வருகிறது. 6ஜிபி ரேம் கொண்ட மாடலில், கூடுதலாக 12ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் வசதி கிடைக்கும். அதாவது மொத்தம் 18ஜிபி ரேம் வரை விரிவாக்க முடியும்.
சிப்செட் மற்றும் டிஸ்ப்ளே
போனில் வேகத்துக்கும் மல்டிடாஸ்க்கிங்கிற்கும் MediaTek Dimensity 6300 Processor வழங்கப்பட்டுள்ளது. 6.67 அங்குல முழு HD+ டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 120Hz தொடு மாதிரி விகிதம் வசதியுடன் வருகிறது.
பேட்டரி மற்றும் சார்ஜிங்
சார்ஜிங் பற்றி பார்க்கையில், Realme P3 Lite 5G 6000 mAh திறன் கொண்ட பெரிய பேட்டரியுடன் வருகிறது. மேலும், 45W Fast Charging வசதியும் உள்ளது.
கேமரா
படங்கள் மற்றும் வீடியோவுக்காக, பின்புறத்தில் 32MP முக்கிய கேமரா, முன்புறத்தில் 8MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்தடில் பட்ஜெட் நல்ல கேமரா செட்டப் எனக் கூறலாம்.
விலை எவ்வளவு?
அதிகாரப்பூர்வமாக வெளியீடு நடைபெறுவதற்கு முன்பே, ஃப்ளிப்கார்ட் தளத்தில் இந்த போனின் விலை விவரங்கள் லீக் ஆகியுள்ளன. 4GB RAM / 128GB சேமிப்பு மாடல் ரூ.12,999க்கு விற்பனைக்கு வரும். மேலும் 6GB RAM / 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.13,999க்கு கிடைக்கும் என லிஸ்டிங் தெரிவிக்கிறது.
சிறப்பு அம்சங்கள்
டூயல் மைக் நாய்ஸ் கான்சலேஷன், ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ், மேலும் AI Smart Loop, Search-to-Search, Google Gemini போன்ற AI அம்சங்களும் இந்த மாடலில் இணைக்கப்பட்டுள்ளன. குறைந்த விலையில் அதிக வசதிகளை வழங்கும் வகையில், இந்த புதிய ரியல்மி மாடல் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.