BMW i4 EV : 10 நிமிட சார்ஜ் 164 கி.மீ. ரேன்ஜ்.. அசத்தலான பி.எம்.டபிள்யூ. கார்... வெளியீடு எப்போ தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Apr 6, 2022, 9:59 AM IST

BMW i4 EV: பி.எம்.டபிள்யூ. நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் பி.எம்.டபிள்யூ. i4 எலெக்ட்ரிக் கார் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.


பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இம்மாத இறுதியில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. மேலும் இந்த எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான வெளியீட்டு தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அதன்படி பி.எம்.டபிள்யூ. i4 எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சந்தையில் ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை மே மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.

பி.எம்.டபிள்யூ. i4 எலெக்ட்ரிக் கார்:

Tap to resize

Latest Videos

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் பி.எம்.டபிள்யூ. i4 எலெக்ட்ரிக் கார் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இது பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 3 சீரிஸ் CLAR ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஃபிளாக்‌ஷிப் iX எஸ்.யுவி. போன்ற மாடல் இல்லை. எனினும், இது கிரவுண்ட்ஸ்-அப் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இது தற்போதுள்ள ICE பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

இது 4 சீரிஸ் கிரான் கூப் மாடலின் ஆல் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இந்த காரும் பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் CLAR ஆர்கிடெக்ச்சரிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பில் i4 மாடல் 4 சீரிஸ் கிரான் கூப் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இதில் பிளான்க்டு-ஆஃப் கிரில் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஏரோ ஆப்டிமைஸ் செய்யப்பட்ட வீல்கள், புளூ அக்செண்ட்கள், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், டுவீக் செய்யப்பட்ட முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இண்டீரியர்:

பி.எம்.டபிள்யூ. i4 எலெக்ட்ரிக் காரின் இண்டீரியர் 4 சீரிஸ் கிரான் கூப் மாடலில் உள்ளதை போன்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் வளைந்த டுவின் ஸ்கிரீன் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் 14.6 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இதில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய ஐடிரைவ் 8 யூசர் இண்டர்ஃபேஸ், ஓவர் தி ஏர் அப்டேட்களை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளது.

பவர்டிரெயின் விவரங்கள்:

சர்வதேச சந்தையில் பி.எம்.டபிள்யூ. i4 மாடல் - இடிரைவ் 40 மற்றும் M50 X டிரைவ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றன. பேட்டரி திறன் 83.9 கிலோவாட் ஹவர் ஆகும். இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இ டிரைவ் 40 வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 340 ஹெச்.பி. திறன், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும். பி.எம்.டபிள்யூ. i4 M50 x டிரைவ் மாடலில் ஆல் வீல் டிரைவ், 544 ஹெச்.பி. திறன், 795 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும். 

பி.எம்.டபிள்யூ. i4 இ டிரைவ் 40 மாடலை முழு சார்ஜ் செய்தால் 590 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இது தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் மற்ற ஆடம்பர எலெக்ட்ரிக் கார்களை விட அதிகம் ஆகும். இதில் உள்ள 200 கிலோவாட் சார்ஜிங் கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 164 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் கிடைக்கும். 

click me!