இந்தியாவின் மிகப் பெரிய கிரிப்டோகரன்சி தளத்தைத் ஹேக் செய்து 230 மில்லியன் டாலர் திருட்டு

By SG Balan  |  First Published Jul 18, 2024, 9:07 PM IST

வியாழக்கிழமை WazirX நிறுவனத்தின் வாலட்டை ஹேக் செய்து திருட்டு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த பயனர்களின் பணம் பறிபோனதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.


இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 230 மில்லியன் டாலர் மதிப்பிலான டிஜிட்டல் சொத்துக்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.

WazirX இந்தியாவின் பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளமாக உள்ளது. வியாழக்கிழமை இந்த நிறுவனத்தின் வாலட்டை ஹேக் செய்து திருட்டு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த பயனர்களின் பணம் பறிபோனதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Latest Videos

undefined

'இந்தியாவின் பிட்காயின் எக்ஸ்சேஞ்ச்' என்று விளம்பரப்படுத்தப்படும் WazirX நிறுவனம் இந்த ஹேக்கிங் மற்றும் திருட்டு பற்றி ட்விட்டரில் அறிவித்துள்ளது.

திருப்பதி தரிசன மோசடி! போலி ஆதார் மூலம் 20 முறை தரிசன டிக்கெட் வாங்கியவர் கைது!

WazirX முதன்மையாக இந்திய சந்தையில் இயங்கும் கிரிப்டோகரன்சி தளமாக உள்ளது. நிதிப் புலனாய்வுப் பிரிவில் (FIU) பதிவு செய்யப்பட்டு இயங்கி வந்த நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. இது இந்தியாவில் ஏராளமான கிரிப்டோ கரன்சி பயனர்களையும் உருவாக்கியது.

வாலட் ஹேக் செய்யப்பட்டது பற்றி தீவிரமாக விசாரித்து வருவதாகவும் பயனர்களின் டிஜிட்டல் முதலீட்டைப் பாதுகாக்க இந்திய ரூபாய் மற்றும் கிரிப்டோ கரன்சி எடுப்பதற்கான வசதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது" என்று WazirX கூறியுள்ளது.

சைபர் தாக்குதலுக்குப் பின்னால் வட கொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஹேக்கிங் சம்பவம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதில் உள்ள அபாயத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தத் துறையில் வலுவான பாதுகாப்பு அம்சங்கள் தேவைப்படுவதையும் உணர்த்துகிறது.

இந்திய அரசாங்கம் கிரிப்டோகரன்சி துறையை ஆய்வு செய்து கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த பரிசீலித்து வரும் நேரத்தில் இந்த ஹேக்கிங் நடந்துள்ளது.

வெறுத்துப் போன மக்கள்... ஜியோ, ஏர்டெல்லுக்கு குட்-பை! BSNL ஐ தேடிச் செல்லும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு!

click me!