பயந்து போய் அவசர அவசரமாக 10,000 கோடி ரூபாயை செலுத்திய ஏர்டெல் நிறுவனம்..!

Published : Feb 17, 2020, 03:14 PM ISTUpdated : Feb 17, 2020, 03:16 PM IST
பயந்து போய் அவசர அவசரமாக 10,000 கோடி ரூபாயை செலுத்திய ஏர்டெல் நிறுவனம்..!

சுருக்கம்

இந்தியாவில் உள்ள சிம்கார்டு நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்டவை அலைக்கற்றை அங்கீகாரம் மற்றும் அலைக்கற்றை பயன்பாடு உள்ளிட்டவற்றிற்காக அரசுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இவ்வாறு செலுத்த வேண்டிய தொகையை ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா உள்ளிட்ட 15 நிறுவனங்கள் செலுத்தவில்லை.

உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 10,000 கோடி ரூபாயை ஏர்டெல் நிறுவனம் செலுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள சிம்கார்டு நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்டவை அலைக்கற்றை அங்கீகாரம் மற்றும் அலைக்கற்றை பயன்பாடு உள்ளிட்டவற்றிற்காக அரசுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இவ்வாறு செலுத்த வேண்டிய தொகையை ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா உள்ளிட்ட 15 நிறுவனங்கள் செலுத்தவில்லை.

இதனையடுத்து ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்ட 15 செல்போன் சேவை நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடியை ஜனவரி 23-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கடந்தாண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கெடு தேதி முடிந்தும், அத்தொகை செலுத்தப்படாத நிலையில் கூடுதல் அவகாசம் கேட்டு செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க;-   முதியவர் இறந்ததாக வதந்தியை பரப்பி ஆதாயம் தேடாதீங்க... முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை..!

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நிலுவைத் தொகையைச் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிகாரிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கடும் கண்டனத்தை தெரிவித்து வழக்கு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, மத்திய தொலைத்தொடர்புத் துறை சனிக்கிழமை இரவுக்குள் செலுத்தக் கோரி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியது. இதையடுத்து, எர்டெல் நிறுவனம் தான் செலுத்த வேண்டிய ஏறக்குறைய ரூ.35 ஆயிரம் கோடியில் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை இன்று தொலைத்தொடர்புத் துறையிடம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,000 கோடி ரூபாய் போக, 25,586 கோடி ஏர்டெல் நிறுவனத்திற்கு இன்னும் பாக்கித் தொகை உள்ளது. எனினும் வோடாஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசுக்கு தொகையை செலுத்துவது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

ஐடி துறையில் புதிய ட்ரெண்ட்! 'ஏஐ' (AI) மூலம் அலுவலகங்களை ஆளும் பெண்கள் - இதுதான் சீக்ரெட்டா?
சுட்டெரிக்கும் வெயில், எகிறும் மின் கட்டணம்! பாக்கெட்டில் பணத்தை மிச்சப்படுத்த 5 ஸ்மார்ட் டிப்ஸ்!