கார்களின் விலை உயர்த்தப்பட்டு வந்தாலும், கார் உற்பத்தியாளர்கள் அவ்வப்போது கார்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து உள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் கார்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகன உற்பத்தியில் ஏற்பட்டுள்ள உதிரி பாகங்கள் தட்டுப்பாடு மற்றும் செலவீனங்கள் அதிகரிப்பதை காரணம் காட்டி கார் உற்பத்தியாளர்கள் கார் மாடல்கள் விலையை உயர்த்தி வருகின்றன. இதன் காரணமாக கார்களை வாங்க முன்பை விட தற்போது அதிக செலவாகிறது. கார்களின் விலை உயர்த்தப்பட்டு வந்தாலும், கார் உற்பத்தியாளர்கள் அவ்வப்போது கார்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து உள்ளன. அந்த வகையில் சிறந்த சலுகை மற்றும் தள்ளுபடியுடன் கிடைக்கும் கார் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி ஆல்டோ 800:
இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை கார் மாடல் ஆல்டோ 800. இதன் விலை ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. ஆல்டோ 800 மாடலுக்கு தற்போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் மற்றும் ரூ. 3 ஆயிரம் வரை ஸ்பெஷல் சலுகை வழங்கப்படுகிறது.
மாருதி எஸ் பிரெஸ்ஸோ:
மாருதி சுசுகி நிறுவனத்தின் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்ஸ்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் வரையிலான சிறப்பு சலுகை மற்றும் ரூ. 3 ஆயிரம் கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. இந்த காரில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி வேகன்ஆர்:
இந்த காருக்கு அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் வரை சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
நிசான் கிக்ஸ்:
நிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 19 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 45 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஆன்லைன் முன்பதிவு சலுகையாக ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் அல்கசார்:
கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கசார் மாடல் பெரும் எதிர்பார்ப்புடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் வாங்குவோருக்கு அதிகபட்சம் 100 சதவீதம் வரையிலான ஆன் ரோடு நிதி சலுகை, 7.25 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.