Digital Camera : பிரபல அமேசான் நிறுவனம் தனது Great Freedom Saleஐ கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை இது அமலில் இருக்கும்.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2024, இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 6 அன்று தொடங்கியது. பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், அதன் வழக்கமான கட்டணங்களை விட தள்ளுபடி விலையில் பல பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் தள்ளுபடிகளைப் பெற, கூப்பன்கள் மற்றும் வங்கிச் சலுகைகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பல பொருட்களை தள்ளுபடி விலையில் அளித்து வரும் அமேசான் நிறுவனம், டிஜிட்டல் கேமராக்களில் கூட சில சிறந்த சலுகைகளை வழங்கியுள்ளது. அதில் முழு பிரேம் கொண்ட கண்ணாடியில்லா கேமராக்கள் முதல் DSLRகள் உட்பட பல கேமராக்கள் அதிரடி தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. இதில் Sonyன் 7M4K போன்ற முழு-பிரேம் கண்ணாடியில்லா கேமராவை கூட நீங்கள் வாங்க முடியும்.
ரூ.107 & ரூ.108-க்கு 35நாளுக்கான ரீசார்ஜ் பிளானா? சான்சே இல்ல! - அதிரவிடும் BSNL!
Sonyன் 7M4Kஐ பொறுத்தவரை ரூ. 2,62,490க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் அந்த கேமரா, தள்ளுபடியில் இப்பொது ரூ 2,14,490க்கு விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக ரூ. 94,950க்கு விற்பனையாகும் Nikon D7500, யாத்திரையாக விலை குறைக்கப்பட்டு ரூ. 83,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. GoPro Hero 12 Black போன்ற பிரபலமான அதிரடி கேமராக்கள் கூட அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விற்பனையில் Panasonic LUMIX G7 ஏற்கனவே ரூ. 54,990க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இப்பொது ரூபாய். 37,000க்கு விற்பனையாகிறது. Insta360 X3 கேமரா ரூ. 49,999ல் இருந்து அதிரடியாக விலை குறைக்கப்பட்டு ரூ. 35,490க்கு விற்கப்படுகிறது. Canon EOS 3000D ரூ. 35,995க்கு விற்பனையான நிலையில், இப்பொது ரூ. 33,890க்கு விற்கப்படுகிறது. GoPro HERO12 பிளாக் ரூ. 45,000ல் குறைந்து ரூ. 34,990க்கு விற்பனையாகிறது.
60% தள்ளுபடி.. எல்லாமே விலை கம்மி.. அனைவரும் எதிர்பார்த்த அமேசான் ஃப்ரீடம் சேல் ஆரம்பம் ஆயிடுச்சு!