வெறித்தனம்... மலேசியாவில் புதிய ஆப்பிள் ஸ்டோர் பக்கத்திலேயே தாறுமாறாக சம்பவம் செய்த சாம்சங்!

By SG Balan  |  First Published Jul 16, 2024, 4:49 PM IST

சாம்சங் முழு ரயில் நிலையத்தையும் தனது விளம்பரங்களால் நிரப்பிவிட்டது. எங்கு திரும்பினாலும் சாம்சங் விளம்பரத்தைத் தான் பார்க்க முடியும். ஆப்பிள் ஸ்டோருக்கு வருபவர்கள் மூலை முடுக்குகளைக் கூட விடாமல் நிறைந்திருக்கும் சாம்சங் விளம்பரங்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே தான் செல்லவேண்டும்.


ஆப்பிள் நிறுவனம் மலேசியாவில் தனது முதல் கடையை கடந்த மாதம் திறந்தது. கோலாலம்பூரின் மையப்பகுதியில் இந்த கடை அமைந்துள்ளது. கண்ணாடி பிரமிடு வடிவமைப்புடன் இந்தக் கடை அழகாகத் தோற்றம் அளிக்கிறது.

ஆனால், இந்தக் கடை திறக்கப்பட்ட உடனே சாம்சங் நிறுவனம் செய்திருக்கும் செயல் ஆப்பிள் ஸ்டோருக்கு சவாலாக மாறியுள்ளது. ஆப்பிள் ஸ்டோர் அமைந்துள்ள டிஆர்எக்ஸ் மாலுக்கு அருகிலுள்ள ரயில் நிலையத்தில் முழுமையான விளம்பர உரிமையை சாம்சங் வாங்கியுள்ளது. ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்ட உடனேயே ரயில் நிலையத்தின் பெயரை 'சாம்சங் கேலக்ஸி' ஸ்டேஷன் என்று மாற்றிவிட்டது.

Tap to resize

Latest Videos

undefined

சாம்சங்கின் விளம்பரப் போட்டி அதோடு நிற்கவில்லை, முழு ரயில் நிலையத்தையும் தனது விளம்பரங்களால் நிரப்பிவிட்டது. எங்கு திரும்பினாலும் சாம்சங் விளம்பரத்தைத் தான் பார்க்க முடியும். ஆப்பிள் ஸ்டோருக்கு வருபவர்கள் மூலை முடுக்குகளைக் கூட விடாமல் நிறைந்திருக்கும் சாம்சங் விளம்பரங்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே தான் செல்லவேண்டும்.

நிலவில் நூற்றுக்கணக்கான குகைகள் இருக்காம்! விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு செய்ய லொகேஷன் ரெடி!

இதனை ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் வீடியோ எடுத்து பதிவுசெய்துள்ளார். "ஆப்பிள் தனது முதல் ஆப்பிள் ஸ்டோரை திறந்த பிறகு சாம்சங் செய்திருப்பதை நம்பவே முடியவில்லை. புதிய ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்ட இடத்தில் இருக்கும் மெட்ரோ நிலையத்தை சாம்சங் தனது விளம்பரங்களால் நிறைத்திருக்கிறது. லிஃப்ட், படிக்கட்டுகள், எஸ்கலேட்டரில் கூட சாம்சங் கேலக்ஸி விளம்ரங்களே உள்ளன" என்று அவர் வியப்புடன் பதிவிட்டுள்ளார்.

"ஆப்பிள் கடைக்குச் செல்ல விரும்பினால், சாம்சங் கேலக்ஸி ரயில் நிலையத்தில் இறங்கி, இந்த சாம்சங் விளம்பரங்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே கடந்து செல்ல வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து வைரலாகப் பரவி வருகிறது. 9 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ 18 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த ஒரு பயனர், "சாம்சங் ஆப்பிளை மிரட்டுகிறது என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார். "இந்த அளவுக்கு அற்பத்தனம் எதற்கு?" என்று மற்றொரு பயனர் ஏளனமாகக் கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட் 2024: மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா நிர்மலா சீதாராமன்?

click me!