Amazon Fab Phone Fest: எக்கச்சக்க ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர் மழை!

Published : Nov 26, 2022, 11:07 PM IST
Amazon Fab Phone Fest: எக்கச்சக்க ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர் மழை!

சுருக்கம்

அமேசானில் Fab Phone Fest 2022 என்ற பெயரில் முக்கியமான ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு ஆஃபர் உள்ளது என்பது பற்றி இங்குக் காணலாம்.

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் Black Friday Sale ஆஃபர் விற்பனை நடந்து வருகிறது. அமேசானில் அதோடு சேர்த்து, ஸ்மார்ட்போன்களுக்காக Fab Phone Fest என்ற பெயரில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஷாவ்மி, சாம்சங், ஐக்கூ, ஒன்பிளஸ், ரியல்மி என பல்வேறு பிராண்டுகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தஆஃபர் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வரையில் இருக்கும்.

வங்கி ஆஃபர்கள்:

பாரத ஸ்டேட் வங்கி (SBI) வங்கியின் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் கூடுதலாக 1000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. HDFC வங்கிக் கார்டுகள் மூலம், இஎம்ஐ முறையில் பொருட்கள் வாங்கினால், வட்டியில்லா இஎம்ஐ வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட் ஸ்மார்ட்போன்:

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனுக்கு, இன்னும் நல்ல சலுகையில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 11,999 ரூபாய்க்கு அறிமுகமானது. தற்போது ஆஃபரில் 8,499 ரூபாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கார்டுகளைப் பயன்படுத்தி 7,649 ரூபாய்க்கு கூடுதல் ஆஃபரில் பெற்றுக்கொள்ளலாம். 

இதில் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, ஹீலியோ ஜி25 ஆக்டா கோர் பிராசசர், 5000mAh சக்தி கொண்ட பேட்டரி, பின்பக்கத்தில் 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, முன்பக்கத்தில் 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா ஆகியவை உள்ளன. பட்ஜெட் விலையில் 4ஜி ரெட்மி ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாகும்.

13MP கேமரா, 5,000mAh பேட்டரியுடன் Lava Blaze Nxt அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்:

Redmi 11 Prime 5G ஸ்மார்ட்போன் 13,249 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதில் 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, மீடியாடெக் 700 பிராசசர், அமோலெட் டிஸ்ப்ளே, 50 மெகா பிக்சல் டூயல் கேமரா அமைப்பு ஆகியவை உள்ளன. 

இதே போல் iQOO Z6 5G ஸ்மார்ட்போன் 14,499 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதில் 4ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, ஸ்னாப்டிராகன் 695-6nm பிராசசர், 120Hz FHD+ டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி ஆகியவை உள்ளன. சார்ஜர் மட்டும் இதில் இருக்காது. தனியாக வாங்கிக் கொள்ள வேண்டும்.

சாம்சங் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு Samsung Galaxy M13 ஸ்மார்ட்போன் ஆபரில் உள்ளது. 6000mAh பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனை வங்கி கார்டு ஆஃபர்கள் எல்லாம் சேர்த்து 10,999  ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம். இதில், 4GB ரேம், 64GB மெமரி, 6000mAh பேட்டரி, ட்ரூ 50 மெகா பிக்சல் டிரிபிள் கேமரா, முன்பக்கத்தில் 50 மெகா பிக்சல் கேமரா, ஒன் யூஐ ஆக்டா கோர் பிராசசர் ஆகியவை உள்ளன.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

200MP டெலிபோட்டோ.. பெரிய பேட்டரி.. AI அம்சங்களுடன் வரும் ஓப்போ ஃபைண்ட் X9
Indigo : பயணிகளுக்கு ரூ 10,000 மதிப்புள்ள வவுச்சர்கள்..! அவமானத்தை ஈடுகட்டும் இண்டிகோ நிறுவனம்..!