Amazfit GTS 2 Mini: ரூ. 4 ஆயிரம் பட்ஜெட்டில் இத்தனை அம்சங்களா? புது அமேஸ்பிட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்..!

By Kevin Kaarki  |  First Published Apr 10, 2022, 5:00 PM IST

Amazfit GTS 2 Mini: ஹூவமி நிறுவனம் அமேஸ்பிட் GTS 2 மினி ஸ்மார்ட்வாட்ச் புது வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 


ஹூவாமி நிறுவனம் 2020 ஆண்டு வாக்கில் அமேஸ்பிட் GTS 2 மினி ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. பின் இதே ஸ்மார்ட்வாட்ச் மாடலின் புது வெர்ஷன் மார்ச் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அமேஸ்பிட் GTS 2 மினி ஸ்மார்ட்வாட்ச் புது வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனை நாளை (ஏப்ரல் 11) துவங்க இருக்கிறது. 

அமேஸ்பிட் GTS 2 மினி புது வெர்ஷன் அம்சங்கள்:

Tap to resize

Latest Videos

அமேஸ்பிட் GTS 2 மினி மாடலின் புது வெர்ஷனில் அல்ட்ரா ஸ்லிம் மற்றும் லைட் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 8.95mm தடிமனாகவும், 19.5 கிராம் எடையையும் கொண்டிருக்கிறது. மேலும் இதில் 1.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 360x354 பிக்சல் ரெசல்யூஷன், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஆல்வேஸ் ஆன் மோட், 2.5D கிளாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. அமேஸ்பிட் GTS 2 மினி புது வெர்ஷனில் 80-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் மற்றும் 68-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.

புதிய அமேஸ்பிட் GTS 2 மினி ஸ்மார்ட்வாட்ச் 220mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை ஆண்ட்ராய்டு 5 மற்றும் ஐ.ஓ.எஸ். 10 மற்றும் அதன்பின் வெளியான ஓ.எஸ். கொண்டிருக்கும் சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும். 

அமேஸ்பிட் GTS 2 மினி மாடலில் 24 மணி நேர இதய துடிப்பு சென்சார் மற்றும் பல்வேறு உடல் ஆரோக்கியம் சார்ந்த விவரங்களை வழங்கும் சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் அமேஸ்பிட் GTS 2 மினி புது வெர்ஷன் 5 ATM சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. 

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய அமேஸ்பிட் GTS 2 மினி மாடலின் விலை ரூ. 5 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இதனை ரூ. 4 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இதன் விற்பனை நாளை (ஏப்ரல் 11) மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. அமேஸ்பிட் GTS 2 மினி மாடல் பிரீஸ் புளூ, ஃபிளாமிங்கோ பின்க் மற்றும் மீட்டியோர் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

click me!