வரும் நாட்களில் மொபைல் ரீசார்ஜ் பிளான்களின் கட்டணங்கள் உயரும் அபாயம் உள்ளது. இதனால் இரண்டாவது சிம் கார்டுக்கு என தனியாக ரீசார்ஜ் செய்வது சற்று சிரமமாக இருக்கலாம்.
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய நான்கு நெட்வொர்க்குகளும் உள்ளன. இவற்றில் ஜியோ, ஏர்டெல் மட்டுமே முன்னியில் உள்ளது. டூயல் சிம் கார்டு வைத்திருக்கும் பெரும்பாலானோர் ஏர்டெல் அல்லது ஜியோவை தான் அதில் ஒரு சிம்மாக வைத்திருக்கின்னர்.
இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக மொபைல் ரீசார்ஜ் பிளான்களின் விலையும் உயரப் போகிறது. நவம்பர் மாதம் முடிவில் இருக்கிறோம்.ஏர்டெலில் ஏற்கெனவே அரியானா, ஓடிசாவில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அங்கு குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 99 ரூபாய் என்று இருந்த நிலையில், தற்போது 155 ரூபாய் என்று உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, உங்களது சிம் 1 (பிமைரரி) ஜியோவாக இருந்து அதற்கு நீங்கள் ரீசார்ஜ் செய்து கொண்டிருந்தால், சிம் 2 ஆக்டிவேட் நிலையில் வைத்திருக்க ஒவ்வொரு மாதமும் 155 ரூபாய் செலுத்த வேண்டும். இருக்கின்ற பொருளாதார நிலையில், வெறும் செயலில் வைத்திருப்பதற்கு மட்டும் 155 ரூபாய் செலவழிக்க வேண்டும் என்பது கடினமானது ஆகும்.
எதிர்காலத்தில், பயனர்கள் தங்கள் செகன்ட் சிம் கார்டுகளை விட்டுவிடுவார்கள், ஏனெனில் அவற்றை செயலில் வைத்திருப்பதற்கான செலவு அதிகரிக்கும். உதாரணமாக, யாரேனும் ஒருவர் தனது செகன்ட் சிம்மாக ஏர்டெலை வைத்திருப்பதற்கு, இதற்கு முன்பு ரூ. 99 செலவு செய்து வந்திருந்தால், இனி அவர்கள் ரூ. 155 செலவழிக்க வேண்டும், இதன் வேலிடிட்டியும் குறைவு.
Airtel, Jio 5ஜி சேவைகள் கூடுதலாக சில நகரங்களில் அமல்!
இதற்கு முன்பு ப்ரீபெய்ட் திட்டங்களில் உள்ள பயனர்கள், இத்தகைய விலை உயர்வை பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த முறை கூட வெறும் 20% முதல் 25% வரை உயர்வு தான் ஏற்பட்டது. ஆனால், தற்போது அளவுக்கதிகமான விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏர்டெல், ஜியோ இந்த இரண்டு நிறுவனங்களும் தற்சமயம் 5ஜி சேவையை கொண்டு வருவதில் முனைப்பாக உள்ளது. 5ஜி சேவைக்கான ரீசார்ஜ் திட்டங்கள் என்று வரும் போது, விலையேற்றம் இன்னும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அப்போது இரண்டு சிம் வைத்திருப்பவர்கள், இன்னும் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
இதுவரையில், 5ஜி ரீசார்ஜ் திட்டங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பயனர்கள் 4ஜி சேவை கட்டணத்திலேயே 5ஜி சேவையை அனுபவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.