ஏர்டெல் சாம்ராஜ்யத்தில் அதிரடி மாற்றம்! 7 ஆண்டுகளுக்குப் பின் விலகும் சுனில் மிட்டல் - அடுத்தது யார்?

Published : Mar 28, 2026, 10:40 PM IST
Airtel Africa

சுருக்கம்

Airtel Africa ஏர்டெல் ஆப்பிரிக்கா தலைவர் பதவியில் இருந்து சுனில் மிட்டல் விலகுகிறார். புதிய தலைவராக கோபால் விட்டல் பொறுப்பேற்கிறார். விலகும் சுனில் மிட்டல் - அடுத்தது யார்?

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் ஜித்தன் மற்றும் பாரதி குழுமத்தின் நிறுவனர் சுனில் பாரதி மிட்டல், ஏர்டெல் ஆப்பிரிக்கா (Airtel Africa) நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வந்த மிட்டல், வரும் ஜூலை 2026-ல் நடைபெறவுள்ள வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு (AGM) பிறகு இப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவார்.

புதிய தலைவராக கோபால் விட்டல்

சுனில் மிட்டலுக்குப் பிறகு, ஏர்டெல் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த கோபால் விட்டல், ஏர்டெல் ஆப்பிரிக்காவின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். தற்போது பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவராக இருக்கும் இவர், இனி நிர்வாகமற்ற தலைவராக (Non-executive Chairman) ஆப்பிரிக்கச் செயல்பாடுகளை வழிநடத்துவார். சர்வதேச அளவில் தொலைத்தொடர்புத் துறையில் மிகுந்த அனுபவம் கொண்ட இவர், ஏற்கனவே GSMA அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு அரசியலா? பொறுப்பேற்கும் சிரவின் மிட்டல்

இந்த தலைமை மாற்றத்தில் மற்றொரு முக்கிய அங்கமாக, சுனில் மிட்டலின் மகன் சிரவின் பாரதி மிட்டல் ஏர்டெல் ஆப்பிரிக்காவின் துணைத் தலைவராக (Deputy Chair) நியமிக்கப்பட்டுள்ளார்.

• நிறுவனத்தின் நிறுவன குடும்பத்திற்கும், பங்குதாரர்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த இவர் உதவிகரமாக இருப்பார்.

• குறிப்பாக 'ஏர்டெல் மணி' (Airtel Money) மற்றும் துபாயில் உள்ள தலைமையக செயல்பாடுகளை இவர் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் ஏர்டெல்லின் ஆதிக்கம்

சுனில் மிட்டலின் தலைமையின் கீழ், ஏர்டெல் ஆப்பிரிக்கா 14 நாடுகளில் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. மொபைல் நெட்வொர்க், டேட்டா கனெக்டிவிட்டி மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் எனப் பல துறைகளில் ஆப்பிரிக்க மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தற்போது கோபால் விட்டல் தலைமையை ஏற்றுக்கொள்வதன் மூலம், நிறுவனம் அடுத்தகட்ட தொழில்நுட்பப் புரட்சிக்குத் தயாராகி வருகிறது.

விலகல் குறித்து சுனில் மிட்டல் கூறியது என்ன?

தனது விலகல் குறித்துப் பேசிய சுனில் மிட்டல், "தலைமைப் பொறுப்பிலிருந்து விலக இதுவே சரியான தருணம். கோபால் விட்டல் மற்றும் சிரவின் மிட்டல் தலைமையின் கீழ் ஏர்டெல் ஆப்பிரிக்கா இன்னும் பல உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.

இந்த தலைமை மாற்றம் ஏர்டெல் ஆப்பிரிக்காவின் சந்தை நிலையை மேலும் வலுப்படுத்தும் என்றும், குறிப்பாக நிதிச் சேவைகளில் (Financial Services) புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்மார்ட்போன் சந்தையில் புதுப்புரட்சி! ரியல்மி 16 5ஜி-யில் இருக்கும் அந்த 'செல்ஃபி மிரர்' ரகசியம் என்ன?
இவ்வளவு சிறிய டெஸ்க்டாப்பா? டெல் ப்ரோ 5 மைக்ரோவின் அதிரடி அம்சங்கள் - மார்ச் 31 முதல் விற்பனை!