இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் 5ஜி சேவைக்கு மாறியுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டில் முதன்முறையாக ஏர்டெல் நிறுவனம் 5ஜி நெட்வொர்க்கை சென்னை உட்பட 8 நகரங்களில் அமலுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 லட்சம் மேற்பட்டோர் ஏர்டெல் 5ஜி சேவைக்கு மாறியுள்ளனர்.
இதுதொடர்பாக ஏர்டெல் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ரந்தீப் கூறுகையில், ‘இப்போது தான் 5ஜி கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்கு வாடிக்கையாளர்களின் வரவேற்பு மிகவும் ஊக்கமளிக்கம் விதமாக உள்ளது. அனைத்து 5ஜி சாதனங்களும் இப்போது ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க்கில் வேலை செய்யும் திறன் பெற்றுள்ளது. சிலவற்றில் வேலைசெய்யவில்லை என்றாலும், வரும் நாட்களில் அவை சரிசெய்யப்படும். முழு நாட்டையும் இணைக்கும் வகையில் எங்களது நெட்வொர்க்கை முன்னெடுத்துச் செல்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இனி யார் வேண்டுமானாலும் Blue Tick பெறலாம்; ஆனா ரூ. 660 செலுத்தனும் எலான் மஸ்க் அதிரடி!!
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து முக்கிய பெருநகரங்களிலும் 5ஜி சேவை கொண்டு வரப்படும். 2023 ஆண்டிற்குள்ளாக இந்தியாவின் அனைத்து நகர்ப்புறங்களிலும் மற்றும் மார்ச் 2024 ஆண்டிற்குள்ளாக நாடு முழுவதிலும் 5ஜி சேவை அமல்படுத்த உள்ளதாக ஏர்டெல் ஏற்கனவே கூறியிருந்தது.
மேலும், தற்போதுள்ள 5G போன்களில் 5ஜி சாப்ட்வேர் அப்டேட்டுகளை வழங்குவதற்கு அந்தந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுடன் இணைந்து ஏர்டெல் செயல்படுகிறது. ஆப்பிள் ஐபோனில் மட்டும் 5ஜி கொண்டு வருவதற்கு டிசம்பர் வரையில் ஆகலாம். ஏர்டெல் 5ஜி இப்போது மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் அமலில் உள்ளது.